|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 July, 2011

கிரைண்டர் இலவசமானாலும் தரம் இருக்கும் அரசு!

இலவசமாகக் கொடுத்தால், அதில் தரம் இருக்காது' என, பலரும் கருதலாம்; அதுவும் அரசு கொடுத்தால் எப்படியிருக்கப் போகிறது என, அலட்சியப்படுத்தலாம். ஆனால், தற்போது அரசு தரும் கிரைண்டர், மார்க்கெட்டில் உள்ள கிரைண்டர்களை விட தரம் வாய்ந்தாக இருக்கும். அதை உறுதி செய்ய, தொழிற்சாலைகளில் டெண்டருக்கு முன்பே அரசு அதிகாரிகள், நேரடியாக திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். அரசின் அதிரடியால், போலியாக டெண்டர் கொடுத்தோர், கலக்கத்தில் உள்ளனர்.

இலவச லேப்டாப், மிக்ஸி, மின்விசிறி வரிசையில் கிரைண்டரும் இடம் பிடித்தது. அடுத்த ஆறு மாதங்களுக்குள், 25 லட்சம் கிரைண்டர்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்தது. கிரைண்டர் கொள்முதல் செய்ய டெண்டர் விடும் முன், பல்வேறு விஷயங்களை தீவிர ஆய்வு செய்தது.கிரைண்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறுக்க, ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியது. இந்த ஆய்வுக்குழுவில் இடம் பெற்றுள்ள, முதுநிலை துணைத்தலைவர் பெருமாள், பொதுமேலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர், நேரடியாக தொழில் நிறுவனங்களை "விசிட்' செய்து தேர்வு செய்துள்ளனர்.

கிரைண்டர் மோட்டார்: கிரைண்டரில் பயன்படுத்தப்படும் மோட்டார், கிராமப்புறங்களில் வரும் ஏற்றத்தாழ்வு மின் அழுத்தங்களுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். தற்போதுள்ள டேபிள் டாப் கிரைண்டர்களில், பெரும்பாலும் 100 வாட் சக்தியில் இயங்குவதாக இருந்தால், இலவச கிரைண்டரில், 150 வாட் மின் சக்தியில் இயங்கும் மின்மோட்டார் இருக்க வேண்டும் என நிர்ணயித்தது. இத்தகைய தரம் வாய்ந்த மோட்டார், இந்திய தயாரிப்பில் மட்டுமே சாத்தியம்.

மின் ஒயர்: மின்மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் ஒயர், கட்டாயமாக ஐஎஸ்ஐ தரத்தில் இருக்க வேண்டும். எவ்விதத்திலும் மின்கசிவு இருக்கக் கூடாது.பிளாஸ்டிக் பாகங்கள்: கிரைண்டரில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாகங்கள், உறுதியாக இருக்க வேண்டும். மேல் மூடி, பாலிகார்பன் எனப்படும் உறுதித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். கீழே தவறி விழுந்தாலும் உடையக் கூடாது .தொழில்நுட்ப விளக்க கூட்டம் சென்னையில் நடந்தபோது, டெண்டரில் பங்கேற்க விண்ணப்பித்த, அனைத்து வெட்கிரைண்டர் தயாரிப்பாளருக்கும், மாதிரி கிரைண்டர்களை சமர்ப்பிக்கும்படி தெரிவித்திருந்தது.

இதில், அரசு கூறிய விதிமுறைகளின்படி தயாரான கிரைண்டரை, பரிசோதனைக் கூடத்தில் சோதனை செய்து, அதைச் சான்றிதழுடன் சமர்ப்பிக்கும்படி கூறியிருந்தது.அதோடு, தற்போது தயாரித்து வரும் கிரைண்டர் ஒன்றையும், இணைக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. இந்த இரண்டு கிரைண்டர்களையுமே பெற்ற அதிகாரிகள், சான்று பெற்ற கிரைண்டரை விட்டு விட்டு, தற்போது நிறுவனங்கள் தயாரித்து வரும் கிரைண்டரை, பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.

திடீர் ஆய்வுகள்: சென்னையில் நடந்த டெண்டரில் பங்கேற்று விட்டு, அடுத்த நாள் கிரைண்டர் தயாரிப்பாளர்கள் ஊருக்குத் திரும்பும் முன்பே, அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். கோவையில் பல நிறுவனங்களில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டனர்.இந்த ஆய்வில், டெண்டரில் குறிப்பிட்டபடி, ஒரிரு லட்சம் கிரைண்டர்களை தயாரிக்கும் அளவுக்கு இந்த நிறுவனங்கள் உண்மையான விவரங்களைக் கொடுத்துள்ளனவா என ஆய்வு செய்தனர். இவற்றை அறிக்கையாக தயார் செய்து, உடனுக்குடன் "ஆன்லைன்' முறையில், சென்னைக்கு அனுப்பினர். நேரடியாக தொழிற்சாலைக்கே வந்து ஆய்வு செய்த குழுவால், தொழிற்சாலை இல்லாமல், வியாபார நோக்கில் பங்கேற்ற நிறுவனங்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், டெண்டரில் பங்கேற்ற பல வர்த்தகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தரத்தில் உயர்வு;விலையில் நியாயம்: அரசு அதிகாரிகளிடம், டெண்டரில் பங்கேற்ற உற்பத்தியாளர்கள் பலர், "அரசு கொடுத்திருந்த விதிமுறைகள், தர நிர்ணயத்தின்படி கிரைண்டர் தயாரித்தால், கூடுதலாகச் செலவாகுமே' என கேட்டுள்ளனர். பதிலளித்த அரசு அதிகாரிகள், "பொருள் எப்படியிருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துள்ளோம். இதற்கு ஆகும் செலவு உள்ளிட்ட நியாயமான விலையை நீங்கள் கேட்கலாம். விலை மலிவாகத்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது' என பதில் அளித்துள்ளனர்.
தலையீடு கிடையவே கிடையாது: டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் உண்மையானவையா, குறிப்பிட்ட அளவுக்கு, வெட்கிரைண்டரை தயாரிக்கும் திறன் வாய்ந்தவையா என்பதையெல்லாம் ஆய்வு செய்ய, அதிகாரிகள் குழு ஈடுபட்டதால், எவ்வித தலையீடும் இல்லாமல் டெண்டர் வெளிப்படையாகவே நடக்கும் என, கோவையைச் சேர்ந்த கோயம்புத்தூர் வெட்கிரைண்டர் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் நிர்வாகி தேவராஜ் நம்பிக்கை தெரிவித்தார். ""சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது நடைமுறைக்கு ஒவ்வாதது. அப்படியிருந்தாலும், கோவையில் தயாராகும் கிரைண்டரின் தரத்துக்கும் குறைவாகவே இருக்கும். அரசு தர நிர்ணயம் செய்திருப்பதால், கிரைண்டர் தொழில் நிறுவனங்கள் அச்சம் கொள்ளத்தேவை இல்லை

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...