|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 August, 2011

சலுகைகள் வழங்கும் மாநிலத்தில் ரூ.1,000 கோடி ஆலை: ஃபோர்ஸ் !

சலுகைகள் அதிகம் வழங்கும் மாநிலத்தில் ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய ஆலை கட்ட இருப்பதாக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூறியுள்ளது. டெம்போ டிராவலர், டிராக்ஸ் உள்ளிட்ட வர்த்தக பயணிகள் வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், புனேயை சேர்ந்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கார் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. இந்த மாத இறுதியில் ஃபோர்ஸ் ஒன் என்ற பெயரில் புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த இருக்கும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் அடுத்த ஆண்டு புத்தம் புதிய எம்பிவி காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த காருக்கான தொழில்நுட்பத்தை பெறுவதற்காக ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனத்துடன் ஃபோர்ஸ் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.இந்த நிலையில், புதிய எம்பிவி கார் தயாரிப்புக்காக ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய கார் ஆலையை அமைக்கப்போவதாக ஃபோர்ஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஃபோர்ஸ் குழுமத்தின் தலைவர் அபய் பிரோடியா கூறியதாவது:
"ஆல் நியூ எம்பிவி கார் தயாரிப்புக்காக ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளோம். கார் ஆலை கட்டுவதற்கு சலுகைகள் வழங்குவது தொடர்பாக மத்திய பிரதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில், சுமூக உடன்பாடு எட்டப்பட்டால், பீதம்பூரில் உள்ள எங்களது அசெம்பிளிங் தொழிற்சாலை அருகிலேயே புதிய அசெம்பிளிங் தொழிற்சாலையை கட்ட திட்டமிட்டுள்ளோம்.

இல்லாவிட்டால், சலுகை அதிகம் கொடுக்கும் மாநிலத்தில் புதிய ஆலையை கட்டுவது குறித்தும் பரிசீலனை செய்வோம்.  ஆண்டுக்கு 12,000 கார்களை உற்பத்தி திறன் கொண்டதாக அமைக்கப்படும் புதிய ஆலை, பின்னர் ஆண்டுக்கு 24,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக விரிவாக்கம் செய்யப்படும். இன்னும் இரண்டு மாதத்திற்குள் புதிய ஆலை கட்டும் இடம் குறித்து இறுதி முடிவு எடுத்துவிடுவோம்," என்று கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...