|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 August, 2011

ஒற்றைத் தலைவலியா ? அசால்டா இருக்காதீங்க

தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல தெரிக்கும் தலைவலியை நம்மில் அநேகம் பேர் உணர்ந்திருக்க முடியும். தலைவலியில் பல விதங்கள் உண்டு. சாதாரண தலைவலி சில நிமிட நேரமே நீடிக்கும். ஆனால் ஒற்றைத் தலைவலி எனப்படும் மைக்ரேன் தலைவலி பிரச்சினைக்குரிய ஒரு நோயாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒற்றை தலைவலிக்கு காரணங்கள் பல உள்ளன. மூளையில் கொப்பளம், நாடாப்புழு மூளையைத்தாக்குதல், சைனஸ், பற்களில் பாதிப்பு போன்றவை இந்தவகை தலைவலி வருவதற்கு காரணமாக கருதப்படுகிறது. ஆனால் முறையற்ற வாழ்க்கை முறையே இந்த மைக்ரோன் ஒற்றைத்தலைவலி வர காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

யாருக்கு பாதிப்பு அதிகம்; மைக்ரேன் தலைவலி குறிப்பிட்ட தரப்பினரை அதிகமாக தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 20 வயதில் இருந்து 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். குறிப்பாக பெண்கள்தான் இந்த பிரச்சினைக்கு அதிகம் ஆளாகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நோய்க்கான மருந்து; ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்துகள் உள்ளன. மனதை ஒருமுகப்படுத்துதல், தியானம், யோகாசனம், ஆகிய பயிற்சிகள் மைக்ரேன் தலைவலியை கட்டுக்குள் வைக்கும். இவற்றைக் காட்டிலும், முறையான ஓய்வு, நேரத்திற்கு கட்டுப்பாடான உணவு, உடற்பயிற்சி போன்றவை ஒற்றைத்தலைவலியை அண்டவிடாமல் செய்துவிடும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...