|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 August, 2011

பார்த்தீனியம் களை கட்டுப்படுத்தும் முறை!

பார்த்தீனியம் களையை கட்டுப்படுத்தும் முறை குறித்த விழிப்புணர்வு முறை குறித்து வடமதுரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெ.பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.பயிர் சாகுபடியில் விவசாயிகளுக்கு விரோதியாக இருப்பது களைகள். இவற்றும் மிகவும் ஆபத்தானது பார்த்தீனியம் என்ற ஒரு களை. இந்த களை எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நன்கு வளரக் கூடிய தன்மை கொண்டது. மேலும் இது மனிதனுக்கும் கால்நடைகளுக்கும் சுவாசக் கோளாறு ஏற்படுத்தி ஆபத்தை உண்டாக்கும் வல்லமை படைத்தது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் பார்த்தீனியத்தை அழித்து கட்டுப்படுத்திட கிராம அளவில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி தொழில்நுட்ப அறிவுரை வழங்க வலியுறுத்தி உள்ளார்.


ஒரு முறை பார்த்தீனியம் விதை உருவாகிவிட்டால் 20 ஆண்டுகள் கூட முளைக்காமல் அப்படியே மண்ணில் இருந்து பின்னர் மீண்டும் வளரும் தன்மை பெற்றது. இவ்வகை பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்திட அவற்றை கைகளால் பிடுங்கி அழித்திட வேண்டும், பயிர் சுழற்சி முறை அதாவது செண்டு மல்லி என்னும் பூச்செடி சாகுபடி செய்து பின்னர் மற்ற பயிர் சாடுதல் முறை பின்பற்றலாம், ஒரு லிட்டர் தண்ணீரில் 200 கிராம் உப்பு கரைத்து தெளித்து இதனைக் கட்டுப்படுத்தலாம், களைக்கொல்லி மருந்து அடித்து கட்டுப்படுத்தலாம், பார்த்தீனிய களையைப் பிடுங்கி அதனை அழுக வைத்து வாட்டமேற்றி உரமாக மாற்றிப் பயன்படுத்தலாம். இது தொடர்பான தொழில் நுட்பம் உதவி வேளாண் அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படி வேளாண் உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...