|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 August, 2011

திருநின்றவூரில் ரசிகர்கள் கட்டிய எம்.ஜி.ஆர். கோவில் இன்று கும்பாபிஷேகம்!

















நடிகராக இருந்து முதல்- அமைச்சர் ஆனவர் எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாக்காரன் என அவர் நடித்த ஏராளமான படங்கள் வெற்றி விழாக்களை கண்டன.
சென்னையில் இன்றும் அவரின் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களில் ரசிகர்கள் பெரும்கூட்டமாக திரள்கிறார்கள். இப்போதும் ரசிகர்கள் இதயங்களில் அவர் வாழ்கிறார். எம்.ஜி.ஆருக்கு தற்போது கோவில் கட்டப்பட்டு உள்ளது.
 
சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருநின்றவூர் நத்தமேடு செல்லியம்மன் சாலையில் இக்கோவில் நிர்மானிக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் எம்.ஜி. ஆரின் மூன்று சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆறு அடி உயரத்திலான ஒரு சிலை மூலவர் சிலையாக வைக்கப்பட்டு உள்ளது. அச்சிலையின் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு அடி உயரத்தில் இரு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
 
கோவில் கோபுரத்தில் ஒருசிலை நிர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலை எம்.ஜி. ஆரின் தீவிர ரசிகரான எல்.கலைவாணன் கட்டியுள்ளார். கோவிலின் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள அவர் கூறும்போது, 1600 சதுரஅடி பரப்பளவில் எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதை கட்ட ரூ.21 1/2 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. இதில் 1 1/2 லட்சம் ரூபாய் ரசிகர்களிடம் வசூலிக்கப்பட்டன என்றார். எம்.ஜி.ஆர். கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. அதிகாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. புரோகிதர்கள் வேதமந்திரம் ஓதினர்.பின்னர் கலசங்களில் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டது. காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆர். சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...