|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 August, 2011

தமிழக அரசு கௌரவம் பார்க்காமல் பயனளிக்க வாய்ப்பில்லாத மோனோ ரயில் திட்டத்தை கைவிட வேண்டும். ராமதாஸ்!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது   சென்னை நகரில் மோனோ ரயில் திட்டத்தை முதல்கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் அது 300 கிலோமீட்டருக்கு நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்க வாய்ப்பில்லாத இத்திட்டத்தை தமிழக அரசு கௌரவம் பார்க்காமல் கைவிட வேண்டும். உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 60 இடங்களில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன. இவற்றில் 48 திட்டங்கள் 3 அல்லது 4 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டுமே உள்ளன.

உலகில் உள்ள மோனோ ரயில் திட்டங்களின் ஒட்டுமொத்த நீளத்தையும் கூட்டினால் அது வெறும் 400 கிலோமீட்டர் மட்டுமே வருகிறது. உலக நிலவரம் இவ்வாறு இருக்கும்போது தமிழக அரசு சென்னையில் மட்டும் 300 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் அமைக்கப் போவதாகக் கூறுவது நடைமுறை சாத்தியமில்லாதது.இவ்வாறு அவர்  அறிக்கையில்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...