|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 August, 2011

ஹசாரேவை புகழ்ந்த வெளிநாட்டு பத்திரிகைகள்!

Indian activist Anna Hazare leaves jail to start 15-day public fast against corruption

Pakistani anti-graft campaigner inspired by Anna protest

India anti-corruption activist Anna Hazare detainedPolice in India have detained prominent activist Anna Hazare hours before he had planned to start a fast against a proposed new anti-corruption law.As news of the arrest spread, his supporters came out on the streets of many Indian cities in protest.Mr Hazare had pledged to go on hunger strike in the capital, Delhi, Tuesday despite police denying him permission to fast for more than three days.

 Charges levelled against me are false: Anna Hazare Ahead of his indefinite fast on the Lokpal issue, social activist Anna Hazare lashed out at the Congress for calling him corrupt according to the Sawant Commission Report. Hazare said, "Charges levelled against me are false. I dare them to conduct an enquiry against me."Gandhian Hazare also added, "Till the time my name is cleared I will continue my fast." 

 

Anna Hazare fast 'totally misconceived' – Indian PM Manmohan Singh steps up rhetoric in row over activist whose jailing has sparked biggest protests in decades

 Anna Hazare to launch public fast as government relents India's beleaguered government caved in to popular fury over corruption on Thursday after thousands protested across the country, granting permission for a self-styled Gandhian crusader to stage a 15-day hunger strike in public.Anna Hazare was arrested on Tuesday, hours ahead of a planned fast to demand tougher laws against the graft that plagues Indian society from top to bottom.But the jailing of the 74-year-old campaigner sparked nationwide protests and put Prime Minister Manmohan Singh's government on a backfoot, forcing it to relent.

 Anna’s Movement Boost Business The protest against anti corruption by Anna Hazare will be a success or not is a question. But this protest has created a hike in business of goods that is used by the Anna's supporters. The whole nation is with him as he is fighting for the future 

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அன்னா ஹசாரேயைப் பற்றி, சர்வதேச அளவில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு, அமெரிக்க இந்தியர்களும் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக மாணவர் உமங் அகர்வால் குறிப்பிடுகையில், "சுப்ரீம் கோர்ட்டுக்கு நாங்கள் ஒட்டுமொத்தமாக இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளோம். ஊழலை தடுக்க சுப்ரீம் கோர்ட் தன்னிச்சையான நடவடிக்கை மேற்கொள்ளும்படி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்' என்றார். இதே போல, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வசிக்கும் இந்தியர்கள், ஹசாரேவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரபல நாளிதழ்களும், ஹசாரேவை பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. "தி டெலிகிராப்' பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில், உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் இந்திய அரசை, ஹசாரே கட்டிப்போட்டு விட்டதாகவும், முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு புகை, மாமிசம், மது, கேபிள் "டிவி' போன்ற விஷயங்கள் பிடிக்காது எனவும், தன் கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் மது குடித்ததற்காக கோவில் தூணில் கட்டி வைத்து ராணுவ பெல்டை கழற்றி அசாரே அடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. "அசாரே தன்னுடைய போராட்டத்தால், டில்லி உள்ளிட்ட நகரங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்' என, "தி இண்டிபென்டன்ட்' என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது. "ஹசாரேவின் போராட்டம் பலத்தரப்பட்ட மக்களையும் ஈர்த்துள்ளது. ஊழலுக்கு எதிராக மற்றவர்கள் நடத்திய போராட்டம் எல்லாம் இவரது போராட்டத்துக்கு முன் காணாமல் போய்விட்டன' என, "கார்டியன்' பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான இந்தியர்கள், புதிய காந்தியின் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளதாக "டெய்லி மெயில்' பத்திரிகை கூறியுள்ளது. ஹசாரேவின் போராட்டத்தால் இந்திய அரசுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாக, "வாஷிங்டன் போஸ்ட்' குறிப்பிட்டுள்ளது. "இந்தியாவில் நடந்த ஊழல்களுக்கெல்லாம் சமாதானம் சொல்லி வந்த காங்கிரஸ் தலைவர்களின் செயல்களையெல்லாம், ஹசாரேவின் போராட்டம் புறந்தள்ளிவிட்டது. வளர்ந்து வரும் ஊழல்களுக்கெதிராக மக்கள் கொதித்தெழுந்து விட்டனர்' என, "நியூயார்க் டைம்ஸ்' தெரிவித்துள்ளது. "கடந்த 1975ம் ஆண்டு எமர்ஜென்சியை எதிர்த்து இந்திராகாந்திக்கு எதிராக நடந்த போராட்டத்தை போல, தற்போது ஹசாரே தலைமையில் மக்கள், ஊழலுக்கு எதிராக திரண்டுள்ளனர்' என, "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...