|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 September, 2011

ஆசிரியைகளின் பாலியல் அத்துமீறல்கள்!



கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்களை மேற்கொண்ட இரு ஆசிரியைகள் குறித்து அந்த சிறுமி கூறியதைக் கேட்கும் போது காது கூசிப் போய் விடும். அந்த அளவுக்கு அறுவறுக்கத்தக்க வகையில் இரு ஆசிரியைகளும் நடந்து கொண்ட விதம் அனைவரையும் கொதிப்படைய வைப்பதாக உள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள்தான் 4 வயது ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஷாலினி அப்பகுதியில்உள்ள புகழ் பெற்ற ஏகேடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாள்.

இந்த நிலையில்தான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பள்ளியின் தலைமை ஆசிரியை லசி போஸ்கோ மற்றும் எல்கேஜி ஆசிரியை போர்ஷியா ஆகியோர் சிறுமியிடம் தகாதமுறையில் நடந்து கொண்டனர். இந்த அக்கிரமத்தைச் செய்த இருவரும், சிறுமியை மிரட்டியும் வைத்திருந்தனர். நடந்ததை யாரிடமாவது கூறினால் பாம்பு அடைக்கப்பட்ட இருட்டு அறையில் வைத்து உன்னைப் பூட்டி விடுவோம் என இவர்கள் மிரட்டியுள்ளனராம்.

ஆனால் ஆசிரியைகளின் அத்துமீறல் அதிகரித்துக் கொண்டே போன நிலையில் தனது மழலை மாறாத குரலில் பெற்றோரிடம் அதைக் கூறியபோது சுரேஷ் தம்பதியினர் அதிர்ச்சியில் நிலை குலைந்து போய் விட்டனர். அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் தெரிந்து அவர்கள் இரு ஆசிரியைகளையும் வீடு புகுந்து தாக்கினர். இதில் போர்ஷியா படுகாயமடைந்தார். அதன் பின்னர் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களைக் கைது செய்யாமல் போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அடைந்தது. அங்கு காவல்துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள்.

இதையடுத்து சுதாரித்த போலீஸார் லசி போஸ்கோவைக் கைது செய்தனர். கேரளாவைச் சேர்ந்தவரான போர்ஷியா தனது ஊருக்கு ஓடி விட்டார். முன்ஜாமீனும் வாங்கி விட்டார். அதேபோல லசி போஸ்கோவும் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். லசி கடலூர் கோர்ட்டிலும், போர்ஷியா கள்ளக்குறிச்சி கோர்ட்டிலும் தினசரி கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்த இரு ஆசிரியைகளும் செய்த செயல்களை சிறுமி ஷாலினி தனது தந்தையிடம் கூற அதை அவர் வீடியோவில் பதிவு செய்து வைத்துள்ளார். அதைப் பார்க்கும் யாருக்கும், அந்தக் குழந்தை கூறியதை கேட்கும் யாருக்குமே இதயம் அடைத்துப் போய் விடும். அதில் கூறப்பட்டுள்ள செய்கைகளை அச்சில் ஏற்ற முடியாது. அந்த அளவுக்கு இரு ஆசிரியைகளும் மிகவும் அநாகரீகமாக அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர்.

மேலும் அவர்களின் செய்கையால் குழந்தை ஷாலினி மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளாள். அதிலும் பாம்பு அடைக்கப்பட்ட இருட்டு அறை என்று ஆசிரியைகள் கூறியது அவளது மனதிலிருந்து இன்னும் விலகவில்லையாம். இதனால் பள்ளியிலிருந்து ஷாலினியை நிறுத்தி விட்டனர் சுரேஷ் தம்பதியினர்.

அதற்குப் பதிலாக தனது மகளுக்கு வீட்டிலேயே சிடிக்களைப் போட்டு பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார் சுரேஷின் மனைவி. மேலும் குழந்தையை சரளமாக, இயல்பு நிலைக்குக் கொண்டு சுரேஷும், அவரது மனைவியும் தீவிரமாக முயன்று வருகின்றனராம். அடுத்த ஆண்டு வேறு பள்ளியில் ஷாலினியைச் சேர்க்கவுள்ளார் சுரேஷ்.

இந்தக் கொடூரச் செயலை செய்த இரு ஆசிரியைகளும் திருமணமானவர்கள், குழந்தைகளும் உள்ளனர். ஆனால் சிறுமி ஷாலினியிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் கள்ளக்குறிச்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு தற்போது போயுள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி இந்த இரு ஆசிரியைகளால் பாதிக்கப்பட்டோர் குறித்த முழு விவரம், ஆசிரியைகளின் பின்னணி, குறிப்பாக போர்ஷியாவின் பின்னணி உள்ளிட்டவை குறித்த உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...