|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 September, 2011

கழுதைகள் போல் ஓடும் இந்திய வீரர்கள்! உண்மைய சொன்னார் நாசர் ஹுசேன்!

இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் மிக மோசமாக உள்ளது. சில வீரர்கள் பந்துகளின் பின்னால் கழுதைகளை போல ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் கிண்டல் செய்துள்ளார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. ஏற்கனவே 0 4 என்ற புள்ளி கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இந்நிலையில் மான்செஸ்டர் நகரில் நடந்த 20 ஓவர் போட்டியிலும் இந்தியா படுதோல்வி அடைந்தது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை தொடங்குகிறது. 

தோல்வி முகத்தில் இருக்கும் இந்திய அணியை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் வீரர்களும் அடங்குவர். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக பொறுப்பு வகித்தவர் நாகர் ஹுசேன்.

இவர் அளித்துள்ள பேட்டியில், 'என்னை பொறுத்தவரை இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாக உள்ளது. 3 அல்லது 4 வீரர்கள் மட்டுமே சிறப்பாக பந்துகளை தடுக்கின்றனர்.ஒருசில வீரர்கள் கழுதைகளை போல பந்துகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களால் பந்தை தடுத்து ரன் குவிப்பை தடுக்க முடியவில்லை. இதுவே முக்கிய பலவீனம் என கருதுகிறேன் என்று கடுமையாக கிண்டல் செய்துள்ளார்.

எப்படி நீ பப்ளிக்கா போட்டு உடைக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம்!

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் முறைப்படி புகார் செய்வோம் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
இந்த கருத்துக்கு தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...