|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 September, 2011

ஏரிகளை பாதுகாக்கும் தனியார் நிறுவனங்கள்!

சங்க காலம் முதல் தமிழக மக்கள் மழை நீரை ஏரிகளில் தேக்கி விவசாயம் செய்து வருகிறார்கள். குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கூட இந்த ஏரியை பயன்படுத்தி வந்தார்கள்.


இந்த நூற்றண்டில் இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணறுகள் தோண்ட துவங்கிய பின்னர் தமிழகத்தில் ஏரிக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது. ஏரிகள் பயன்பாடும், பராமரிப்பும் இல்லாமல் போனதால், படிப்படியாக நில ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி, பெரிய ஏரிகள் எல்லாம் இப்போது சுருங்கி குட்டையை போல மாறிவிட்டனநகர்ப் புறங்களில் உள்ள ஏரிகள், கழிவு நீரைத்தேக்கி வைக்கவும், குப்பை கூலங்ககளை கொட்டி வைக்கவும் இப்பொழுது பயன்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சிப் பகுதியில் இருந்த பல ஏரிகள் மூடப்பட்டு விட்டன. இன்னும் சில ஏரிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. நாட்டில், ஏற்படும் குடிதண்ணீர் பற்றாக்குறைக்கும், நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கும் ஏரிகள் இல்லாமல் போனதுதான் காரணம் என்பதை உணர்ந்த சமுக ஆர்வலர்களும், சமுக நல அமைப்புகளும் ஏரியை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து போராடி வருகிறது.

.சில அமைப்புகள் தாங்களே, தாங்கள் சொந்த செலவில் ஏரியை பராமரித்து பாதுகாக்கிறோம், ஏரியை எங்களிடம் ஒப்படயுங்கள் என்று அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளன. இந்நிலையில் அம்மாபேட்டையில் உள்ள குமரகிரி ஏரியையும் தங்களிடம் ஒப்படைக்கும் படியும், பாழடைந்து கிடக்கும் அந்த ஏரியை ஆழப்படுத்தி சுத்தம் செய்து, மரக்கன்றுகள் நட்டு, பறவைகள் சரணாலயம் அமைத்து, மாணவ மாணவியர்களுக்கு நீச்சல் பயிற்சிக்கும், சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்கும் பயன்படுத்திக்கொள்ள இந்த ஏரியை பயன்படுத்திக்கொள்கிறோம் என்று “சிட்டிசன் போரம்’ அமைப்பினர் சேலம் மாநகராட்சியிடம் அனுமதி கேட்டனர்.ஏரியின் பாதுகாப்பு, மண் எடுத்தல், கரை அமைத்தல், மீன்பிடி உரிமை உட்பட சில பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் குமரகிரி ஏரியை பரமரித்துக்கொள்ளும் பொறுப்பை “சிட்டிசன் போரம் அமைப்பினரிடம் வழங்கியுள்ளது சேலம் மாநகராட்சி.


மாநகராட்சியின் பராமரிப்பில் கவனிப்பரில்லாமல் கிடக்கும் இந்த ஏரியில், சேலத்தில் உள்ள பெரும்பாலான இரட்சிகடைகக்ரர்கள் கொண்டுவந்து போடும் மாமிச கழிவுகளுடனும், அம்மாபேட்டை பகுதியிலிருந்து வரும் அனைத்து சாக்கடை நீரும், பிலாஸ்டிக் கழிவுகளும் கலந்து குப்பை கூலங்களுடன் நாற்றமெடுத்து கிடந்த குமரகிரி ஏறி இனி சுற்றுலா தளமாகப்போகிறது என்ற செய்தி பொது மக்களையும், சமூக ஆர்வலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ''தண்ணீர்'' மனிதனின் ''உயிர் நீர்'' என்பதை அணைவரும் உணர்ந்தால்தான், நாட்டில் உள்ள நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருக்க முடியும்.

சேலத்தில், இருக்கும் அழகாபுரம் இஸ்மாயில்காண் ஏரி, கன்னங்குறிச்சி மூக்கநேரி ஆகிய இரண்டு ஏரிகளையும் நாங்கள் ஆழப்படுத்தி மரக்கன்றுகள் வைத்து, பறவைகள் சரணலயமாக மாற்றி பராமரித்துக் கொள்கிறோம் என்று சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம் அனுமதி வாங்கிய சேலம் “சிட்டிசன் போரம்’ என்ற அமைப்பினர் அந்த இரண்டு ஏரிகளிலும், தூர் வாரி, ஏறிக்கரைகளை பலப்படுத்தி, கரைகளில் மரக்கன்றுகள் வைத்து, பறவைகள் சரணாலயமாக  அமைத்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...