|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 September, 2011

போப் பெனடிக்ட் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு!

கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் போப் பெனடிக்ட் XVI மற்றும் 3 வாடிக்கன் கர்டினால்கள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போப் பெனடிக்ட் XVI உள்ளார். அவர் வாடிகன் நகரில் வசித்து வருகிறார். அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் உயிர்பிழைத்தவர்கள் மையம் சார்பில் போப் பெனிடிக்ட் XVI மற்றும் வாடிகன் நகரின் செயலரான கார்டினல் டர்சிஸியோ பேர்டோன், கார்டினல் கல்லூரியின் டீன் கார்டினல் ஏஞ்சிலோ சோடனோ, விசுவாச உபதேச சபையின் தலைவர் கார்டினல் வில்லியம் லிவாடா ஆகிய 4 பேர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் பாதிரிமார்களால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்த குற்றசாட்டுகள் மீது, போப் பெனிடிக் XVI மற்றும் 3 கார்டினல்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இது மனிதநேயத்திற்கு எதிரான செயலாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சர்வதேச சட்ட நிபுணர்கள் சிலர் கூறியதாவது, மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள், இனப்படுகொலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கிறது. வாடிகன் தலைவர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் முன், அந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தின் கட்டுபாட்டிற்குள் வருகிறதா என்பதை கண்டறிய வேண்டியுள்ளது.

உலகளவில் நடைபெறும் குற்ற சம்பவங்களை விசாரிப்பது அவ்வளவு எளிதல்ல. சர்வதேச அளவில் சர்வதேச நீதிமன்றத்தின் எல்லைக்குள் பல உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த பட்டியலில் வாடிகன் நகரம் வருவதில்லை, என்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...