|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 September, 2011

வரிவசூலில் அலட்சியம்: மத்திய தணிக்கை துறை !

தமிழக போக்குவரத்து துறையின் கவனக்குறைவான நடவடிக்கைகளால், கோடிக்கணக்கான ரூபாய் மாநில அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய தணிக்கைத் துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

தமிழக போக்குவரத்து துறையின் 2009-10 வரையுள்ள வரவு-செலவு கணக்குகளை மத்திய தணிக்கை துறை கணக்கிட்டது. அது குறித்து மத்திய தணிக்கை துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிகளின்படி, வாகன உரிமையாளர்கள் வாகன வரி, கூடுதல் நிலுவை வரி என்ற வேறுபாடு உள்ளது.

இதிலும் ஒப்பந்த பஸ்களாகவோ அல்லது நிறுத்த பஸ்களாகவோ பயன்படுத்துவதற்கு இடையேயான வேறுபாட்டை பொறுத்து வரி செலுத்த வேண்டும்.  ஆனால், இந்த வேறுபாடு இல்லாமல் பல போக்குவரத்து அலுவலகங்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் வசூலித்துள்ளது. கடந்த 2009-10 கணக்குகளை ஆய்வு செய்ததில், 7.79 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை போக்குவரத்து துறை வசூலிக்கப்படாமலேயே விட்டுள்ளது தெரிகிறது.

தமிழகத்தின் கரூர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் தணிக்கை செய்யப்பட்டது. இதில் 2008-09ம் ஆண்டில் 120 ஸ்பேர் பஸ்களை ஒப்பந்த பஸ்களாக இயக்க அனுமதிக்கப்பட்டு, தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கான வரி, ஒப்பந்த பஸ்களுக்குரிய வீதத்தில் வசூலிக்கப்படவில்லை. இதில் 7.05 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசால் மூலம் 2008 டிசம்பர் மாதம் முதல், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட சரக்கு வாகனங்களை தமிழகத்தில் பயணிக்க 3,000 ரூபாய் என இருந்த வரி 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

ஆனால், அந்த வரி உயர்வை கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லை, உள்ளிட்ட 8 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுத்தவில்லை. இதனால், 36.92 லட்சம் ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மோட்டார் வாகன வரி சட்டப்படி, பிறமாநில ஆம்னி பஸ்களுக்கு தற்காலிக உரிமம் வழங்குவதற்காக வரி வசூலிப்பில் சரியாக கணக்கிடாமல் விட்டதால், 37.03 லட்சம் ரூபாய் அளவிற்கு குறைவாக வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை, சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...