|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 October, 2011

இந்தியாவின் முதல் பார்முலா-1 கார் பந்தயம் இன்று நொய்டாவில் துவங்குகிறது!


கார் பந்தய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ள இந்தியாவின் முதல் பார்முலா-1 கார் பந்தயம் நாளை நொய்டாவில் துவங்குகிறது. இதற்காக, போட்டியை நடத்தும் ஜேபி ஸ்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. பார்முலா-1 கார் பந்தயங்கள் மேற்கத்திய நாடுகளில் மட்டும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், முதல் முறையாக இந்தியாவில் பார்முலா-1 கார் பந்தயங்கள் நடைபெற உள்ளன. ஏர்டெல் இண்டியன் கிராண்ட் பிரிக்ஸ் என்ற பெயரில் நடைபெற உள்ள இந்த பந்தயங்கள் டெல்லி அருகே நொய்டாவில் ஜேபி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அமைத்துள்ள புதிய ரேஸ் டிராக்கில் நடைபெற உள்ளன. புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரேஸ் டிராக்கை இந்தியாவின் முதல் பார்முலா-1 டிரைவர் நரேன் கார்த்திகேயன் கடந்த செவ்வாய்க் கிழமை திறந்து வைத்தார்.

இந்த நிலையில், இந்த ரேஸ் டிராக்கில் இந்தியாவின் முதல் பார்முலா-1 பந்தயங்கள் நாளை கோலாகலமாக துவங்குகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கார் பந்தயத்தை கொடியசைத்து துவங்கிறார். நாளை பயிற்சி பந்தயங்களும், நாளை மறுதினம் சனிக்கிழமை தகுதிச்சுற்றுகளும், வரும் ஞாயிற்றுக்கிழமை(30-10-2011)இறுதிச் சுற்றுப் போட்டிகளும் நடக்கின்றன. 5.14 கிமீ நீளம் கொண்ட ரேஸ் டிராக்கில் ஒவ்வொரு பந்தயமும் 60 லேப்புகள் (மொத்தம் 308 கிமீ) கொண்டதாக இருக்கும்.

இந்த பந்தயங்களில் பெர்னான்டோ அலோன்சோ, ஹாமில்டன், மைக்கேல், ஷூமேக்கர் உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்களும், நரேன் கார்த்திகேயன், கருண் சண்டோக் உள்ளிட்ட முன்னணி இந்திய வீரர்களும் பங்கேற்க இருப்பதால், கார் பந்தய ரசிகர்களுக்கு இப்போதே பார்முலா-1 ஜுரம் பற்றிக்கொண்டுவிட்டது. மேலும், போட்டியை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டெல்லியில் குவியத்துவங்கியுள்ளனர். இந்த நிலையில், போட்டிக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக ஜேபி குழுமம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, போட்டிகள் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...