|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 October, 2011

போயிங்-ட்ரீம்லைனர் 787 விமான சேவை துவங்கியது!

போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள அதிநவீன விமானமான ட்ரீம்லைனர் 787 விமானம் தனது முதல் பயணத்தை நேற்று தொடங்கியது. உலகில் அதிகப்படியான பயணிகளுடன் பயணிக்கும் விமானம் ஏர்பஸ் (ஏ-380). சுமார் 800 பயணிகள் வரை பயணிக்ககூடிய இந்த விமானத்தில் அதி நவீன வசதிகள் நிறைய உள்ளன. இந்நிலையில் ஏர்பஸ் விமானத்திற்கு போட்டியாக போயிங் நிறுவனம் ட்ரீம்லைனர் 787 என்ற விமானத்தை உருவாக்க முயற்சித்தது, ஆனால் முடியவில்லை. இருந்தபோதிலும் இதுவரை தயாரிக்கப்பட்ட போயிங் விமானங்களை விட மிக அதிகமான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த விமானம் தான். சுமார் 260பேர் வரை இந்த விமானத்தில் பயணிக்கலாம். போயிங் நிறுவனம் தயாரித்துள்ள இந்த முதல் விமானத்தை, ஜப்பானின் நிப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ட்ரீம்லைனர் 787 விமானத்தின், முதல் சேவை, 240 ப‌யணிகளுடன் டோக்கியாவில் இருந்து ஹாங்காங் வந்து சேர்ந்தது. ட்ரீம்லைனர் 787 விமானத்தின் முதல் சேவையில் பயணித்த பயணிகள், விமானத்திலிருந்து மிகுந்த உற்சாகத்துடன் இறங்கி வந்தனர்.  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...