|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 October, 2011

700 கோடியை எட்டுகிறது உலக மக்கள் தொகை !


உலக மக்கள் தொகை, 700 கோடியை எட்டுகிறது. ஐ.நா., மக்கள் தொகை நிதி நிர்வாக இயக்குனர் பபாதுண்டி ஓசோடைம்ஹின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்னும் நான்கு நாட்களில், உலக மக்கள் தொகை, 700 கோடியாகிறது. உலக மக்கள் தொகையில், 10 முதல், 24 வயதுள்ளவர்களின் எண் ணிக்கை, 180 கோடி. எதிர்காலம், இளைஞர்களின் கையில் உள்ளதால், இவர்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் உலக நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயங்களுக்காக அதிகம் செலவிடப்பட வேண்டும்.

எவ்வளவு தான் நவீன மயமானாலும் ஆண், பெண் மற்றும் இனப்பாகுபாடுகள், பல நாடுகளில் நிறையவே காணப்படுகின்றன. இந்த பாகுபாடுகள் மறைந்தால் தான், பொருளாதாரம் மற்றும் பல துறைகளில் வளர்ச்சி காண முடியும். வளரும் நாடுகளில் இன்னும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. இந்த நாடுகளில் உள்ள வளர் இளம் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி பற்றியோ, கருத்தடை பற்றியோ, எய்ட்சிலிருந்து பாதுகாத்து கொள்ளும் அறிவோ போதிய அளவுக்கு இல்லை. இவ்வாறு பபாதுண்டி ஓசோடைம்ஹின் கூறியுள்ளார்.

உ.பி.,யில் விழா: வரும் 31ம்தேதி, மக்கள் தொகை 700 கோடியை எட்டுவதால் இதற்கான விழாவை உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. "பிளான்' என்ற சர்வதேச அமைப்பு இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் நைஜல் சாப்மேன் குறிப்பிடுகையில், " உலகம் முழுவதும் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது. பொருளாதார காரணங்களுக்காக இந்தியாவில் பெண் சிசு கொலை அதிகம் நடக்கிறது. இதன் காரணமாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற நிலை காணப்படுகிறது. பஞ்சாபில் இந்த நிலை இன்னும் மோசம். அங்கு ஆயிரம் பையன்களுக்கு 846 சிறுமிகள் என்ற விகிதாசாரம் காணப்படுகிறது. உ.பி.யில் பிறப்பு விகிதம் அதிகம் என்பதால் 700வது கோடி குழந்தையின் பிறப்பை லக்னோவில் கொண்டாட உள்ளோம். 700வதுகோடி குழந்தைக்கு சான்றிதழும் அளிக்க உள்ளோம். பெண் குழந்தைகளை போற்றும் விதத்தில் இந்த விழா அமைய உள்ளது' என்றார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...