|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 October, 2011

குணசித்திர நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன் (71) காலமானார்!


200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  நரசிம்மன்.   “ஆறில் இருந்து அறுபது வரை” படத்தில் ரஜினி தம்பியாக நடித்தார். கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து எல்.ஐ.சி. நரசிம்மன் நடித்த காமெடி காட்சிகளும் பேசப்பட்டன. வித்வான் கவுண்டமணியிடம் கசாப்பு கடைக்காரரான எல்.ஐ.சி. நரசிம்மன் பாட்டு கற்று கொள்ள வருவார் “நின்னுக்கோரி வரணும்” என்ற பாடலை வேறு மெட்டில் பாட கவுண்டமணி சொல்லி கொடுப்பார். இதில் நரசிம்மன் ஆடுவெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு கறியை வெட்டிக்கொண்டே பாடி கவுண்டமணியை பயமுறுத்த அவர் ஓடி விடுவார். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் எல்.ஐ.சி. நரசிம்மன் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டார். நேற்று உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். 
 
எல்.ஐ.சி. நரசிம்மனுக்கு சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். சின்மயா நகர் நெற்குன்றம் ரோட்டில் உள்ள வீட்டில் நரசிம்மன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...