|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 October, 2011

புளித்துப்போன பாடல்களில் இருந்தும் தமிழ் சினிமா விடுபடவேண்டிய காலம் - வைரமுத்து!


நேற்று பூந்தமல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடந்தது. கவிஞர் வைரமுத்து படப்பிடிப்பு தளத்துக்கே சென்று கமல்ஹாசனை சந்தித்தார். காலை 11 மணிக்கு சந்தித்த இருவரும் மாலை 6 மணி வரை தீவிரமாக கதை விவாதத்தில் ஈடுபட்டார்கள். கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் புதிய படம், `விஸ்வரூபம்'. இந்த படத்துக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.  இதுவரை படமாக்கிய காட்சிகளை, வைரமுத்துவுக்கு திரையிட்டு காண்பித்தார், கமல்ஹாசன். 40 நிமிடம் ஓடிய படத்தை பார்த்து, வித்தியாசமான கதைக்களத்தையும், கமல்ஹாசனின் அபாரமான நடிப்பையும், புத்திசாலித்தனமான தொழில்நுட்பத்தையும் பாராட்டினார், வைரமுத்து. படத்தில், 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒரு பாடலை கமல்ஹாசனே எழுதியிருக்கிறார். வைரமுத்து 5 பாடல்களை எழுதுகிறார். சங்கர் மகாதேவன் இசையமைக்கிறார். ’’சலித்துப்போன கதைகளில் இருந்தும், புளித்துப்போன பாடல்களில் இருந்தும் தமிழ் சினிமா விடுபடவேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த படத்தில், பாடல்களின் தரத்தை இன்னொரு உயரத்துக்கு ஏற்ற விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமையை கொடுக்க வேண்டும்'' என்று வைரமுத்து கேட்டுக்கொண்டார். "உங்களுக்கு இல்லாத உரிமையா? எடுத்துக்கொள்ளுங்கள்’’என்றார், கமல்ஹாசன்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...