|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 October, 2011

கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை," என சமீபத்திய ஆய்வு!


கார் விபத்துக்களில் சிக்கிய 2,000 பெண்களிடம் லண்டனை சேர்ந்த யங் மர்மலடே என்ற காப்பீட்டு நிறுவனம் ஆய்வு ஒன்றைநடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் பிரபல டெய்லி மெயில் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், விபத்தை ஏற்படுத்தும் பெரும்பாலான பெண்கள் தங்கள் மீதுள்ள தவறை ஒப்புக்கொள்வதே இல்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் கலந்துகொண்ட 10 பெண்களில் 8 பெண்கள் விபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதற்கு நான் பொறுப்பில்லை, என் மீது எந்த தப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், எதிரில் வந்த வாகன ஓட்டிகள் மீது பழியைப் போட்டுள்ளனர், என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், விபத்து நடநததற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை என்று கூறிய பல பெண்கள், காரில் பிரச்னை இருந்துள்ளது, எதிரில் வந்தவர்தான் வேகமாக வந்து மோதிவிட்டார் என்று வாயில் கிடைத்த வாசகத்தை அந்த பெண்கள் அள்ளி வீசியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மொத்தத்தில் விபத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதுதான் ஆய்வில் கலந்துகொண்ட பெரும்பாலான பெண்களின் பதிலாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...