|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 October, 2011

சட்டவிரோதமாக நிலப் பகுதிகள் தோண்டப்படுவதால், உலக புகழ்பெற்ற சீனப் பெரும் சுவரின் பல பகுதிகள் இடிந்து சேதமடைந்துள்ளதாக சீன அதிர்ச்சி!


கி.பி.3ம் நூற்றாண்டில் மிங் என்ற மன்னரால் கட்டப்பட்டது சீனப் பெரும்சுவர். தற்போது உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள இந்த சுவரை காண, உலகின் பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மொத்தம் 5,500 மைல் நீளம் கொண்ட இந்த பெருஞ்சுவர் சீன நாட்டின் 11 மாகாணங்களின் வழியாக செல்கிறது. சந்திரனிலிருந்து பூமியை பார்க்கும் போது மனித படைப்பாக பூமியில் தெரிவது இந்த சீனா பெரும் சுவர் மட்டுமே. இத்தனை சிறப்புகளை கொண்ட சீனா பெருஞ்சுவர் தற்போது ஆங்காங்கே இடிந்து சேதமடைந்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணமாக பெருஞ்சுவரை ஒட்டியுள்ள பகுதிகளில் பழங்காலத்து தங்கம், வெள்ளி விலையுயர்ந்த பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக உள்ள நம்பிக்கை ஆகும். இதை கைப்பற்ற அப்பகுதியில் பலரும், சட்டவிரோதமான முறையில் தோண்டி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, தட்பவெப்ப நிலை மற்றும் சீனா-ஜப்பான் நாடுகளிடையே நடந்த போரின் அதிகளவிலான சுவர் பகுதிகள் சேதமடைந்தன. சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹிபிய் மாகாணத்தில் பெருஞ்சுவர் 80 சதவீதம் பகுதிகள் இடிந்துவிட்டது. இதற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் பராமரிப்பின்றி விடப்பட்டதே காரணம் என தெரிகிறது.

இதுகுறித்து ஹிபிய் மாகாணத்தை சேர்ந்த கட்டக்கலை நிபுணர் ஒருவர் கூறியதாவது, சுவரை சுற்றிலும் எத்தனை இடங்களில் மக்கள் தோண்டி வருகிறார் என தெரியவில்லை. வரலாற்று சிறப்புமிக்க இந்த சுவரை பாதுக்காக்க, சீனா அரசு தான் முயற்சிகள் எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...