|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 October, 2011

குழந்தைகளுக்கு சூரிய ஒளி அவசியம்!


கிராமங்களில் குறைந்தது இரண்டடி அகலமாவது விட்டு வீடுகள் கட்டப்பட்டிருக்கும். சந்து என்று அதற்கு பெயர். வீட்டுச்சுவர்களில் ஜன்னல் வைக்க வசதியாகவே இவ்வாறு தனித்தனியாக வீடுகள் கட்டப்பட்டன. இந்த ஜன்னல்கள் வழியே சூரிய ஒளி ஊடுருவி அனைவரையும் தொட்டுச்செல்லும். ஆனால் நகர்புறங்களில் ஒன்றுடன் ஒன்று ஒட்டியும் சரியான காற்றோட்ட வசதியின்றியும், ஒன்றன் மீது ஒன்றாக வீடுகள் அடுக்கு மாடி குடியிருப்புகளாக கட்டப்படுகின்றன. என்னதான் வீட்டு முன்பு காலியிடம் விட்டு பூங்கா அமைக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தாலும் அபார்ட்மென்ட் குழந்தைகள் யாரும் அதில் விளையாடுவதில்லை. இதனாலேயே அபார்ட்மென்ட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு எலும்பு பாதிப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன. அபார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்றழைக்கப்படும் இந்த புதிய குறைபாடு அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. குழந்தைகளில் எலும்புகளை முற்றிலும் பாதிக்கும் புது பிரச்சினையாக இந்நோய் உருவெடுத்துள்ளது.

இந்நோய் எப்படி ஏற்படுகிறது: இதன் விளைவாகத்தான் சென்னை போன்ற மாநகரங்களில் சிறிய இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. வேலை நிமித்தமாக பெரும்பாலோனோர் பெருநகரங்களில் குடியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதால் இடப்பற்றாக்குறையினால் பலரும் அபார்ட்மென்ட்களில் வசிக்க வேண்டியுள்ளது. போதிய காற்று, வெளிச்சம், போன்றவை குறைவு. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வளரும் குழந்தைகளை அபார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்கிற புதிய குறைபாடு தாக்கத் தொடங்கியுள்ளது. எளிதில் எலும்பு உடைதல், விரிசல் ஏற்படுதல், மற்றும் ரிக்கெட், போன்ற பிரச்சினைகள் இந்த குறைபாட்டினால் ஏற்படுகின்றன.
சூரியஒளி தேவை: அதிகாலையிலே உடலில் படும் சூரிய ஒளி எலும்புகளுக்கு சத்தளிக்கக் கூடிய விட்டமின் டி யை உற்பத்தி செய்கின்றன. ஆனால் சூரிய ஒளி பட்டால் கறுத்துவிடுவார்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதால் குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்க மறுக்கின்றனர். மேலும் ஏ.சி போட்டு கதவுகளை அடைத்து விடுவதால் இயற்கை தன்மை இல்லாமல் போய் விடுகின்றது. இதனால் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளிடையே இக்குறைபாடு அதிகம் காணப்படுகின்றன. கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் வெயில் மழை என்றும் பாராமல் விளையாடுவதானேலே அவர்களுக்கு இதுபோன்ற நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

வைட்டமின் டி அவசியம்: இந்நோய் தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தினமும் காலை வெயிலில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைப்பதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இதன்மூலமே அபார்ட்மெண்ட் சின்ட்ரோம் போன்ற நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். என்கின்றனர் மருத்துவர்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...