|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 October, 2011

ரத்தசோகையை குணமாக்கும் வாயுவிளங்கா வேர்!


இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் வளரும் கொடி வகையினைச் சேர்ந்த மூலிகைத் தாவரம் வாயுவிளங்கா. இது வெண்மை மற்றும் பச்சை வண்ணமுடைய மலர்களைக் கொண்டது. இதன் இலைகள், வேர், வேர்பட்டை மற்றும் கனி விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்: விதைகளில் எம்பிளின் எனும் ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. எஸ்ட்ரோஜென் மற்றும் புரோஎஸ்ட்ரோஜென் போன்றவற்றை உருவாக்க எம்பெளின் உதவுகிறது.நிமோனியாவிற்கு மருந்து: இளம் இலைகள் இஞ்சியுடன் சேர்ந்து வாய்ப்புண் மற்றும் நாட்பட்ட புண்களுக்கு கொப்பளிப்பாக உதவுகின்றன. வேர்பட்டையின் தூள் பல்வலிக்கு சிறந்த மருந்தாகும். வேர்ப்பட்டையின் களிம்பு நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மார்பில் பூசப்படுகிறது. வேரின் கஷாயம் இருமல் மற்றும் வயிற்றுப் போக்கினைச் சரிப்படுத்தும். கனிகள் ஜீரணம் மற்றும் உடலின் நலம் தேற்றுதல், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றல், சீதபேதியினை கட்டுப்படுத்தல், தசைகள் சுருக்கியாக பலவகைகளில் பயன்படுகின்றன. ரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை போன்றவற்றிலும் உதவுகிறது.குளுமை தரும் கனி: விதைகளின் பொடி வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுகிறது. விதைகளின் வடிநீர் காய்ச்சல், தோல்நோய்கள், மற்றும் மார்புவலி போன்றவற்றில் பயன்படுகிறது. கருத்தடையாகவும் பயன்படுகிறது.கனியின் சதைப்பகுதி பேதி தூண்டும். கனியின் சாறு குளுமை தருவதுடன் வியர்வை தூண்டுவியாகும் மலம் இளக்கியாகவும் செயல்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...