|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 October, 2011

டீத் தூளில் கலப்படத்தை ஒழிக்க முடியாது தென்னிந்திய தேயிலை வாரியம்!


சில்லரை வணிகத்தில் தேயிலைத் தூளில் கலப்படத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது. கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமத்தை மட்டுமே ரத்து செய்ய முடியும் என தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் பேசினார். கோவை வெள்ளக்கிணறு தேயிலை வர்த்தக சங்க 29வது பொதுக்குழு கூட்டம், தலைவர் ஆனந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் கலந்து கொண்டு பேசியதாவது, தென்னிந்திய தேயிலைத் தூள் பாகிஸ்தான், ஈராக், ஈரான், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவ்வாறு ஏற்றுமதியாகும் தேயிலைத் தூளை கேரளாவில் மதிப்பு கூட்டு வரி இல்லை என்பதால் கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து அனுப்புகின்றனர். தமிழகத்தில் ஏற்றுமதிக்கான மதிப்புக் கூட்டு வரி (வாட்) நடைமுறையில் உள்ளதால், வர்த்தகர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சில்லரை வணிகத்தில் தேயிலைத் தூளில் கலப்படத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது. கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமத்தை மட்டுமே ரத்து செய்ய முடியும். நுகர்வோர்கள் தான் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 1998ம் ஆண்டு பதியப்பட்ட எஸ்டேட்டுகளில் தற்போது 9 விழுக்காடு நிலப்பரப்பு குறைந்து காணப்படுகிறது. தேயிலை எஸ்டேட்டாக பயன்படுத்தப்பட்ட நிலத்தை சிலர் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு வர்த்தக நோக்கத்துடன் பயன்படுத்தும் அந்த நிலங்களை தேயிலை வாரியம் திரும்ப எடுத்துக் கொள்ளும். இந்தியாவில் 6 தேயிலை கொள்முதல் மையங்கள் உள்ளன. தென்னிந்தியாவில் கொச்சி, கோவை, குன்னூரில் உள்ளன. இதில் இந்திய அளவில் கோவை 5வது இடத்தில் உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...