|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 October, 2011

ஐஐடிகளுக்கு தகுதி குறைவான மாணவர்கள் வருகின்றனர் நாராயணமூர்த்தி!

ஐஐடிகளில் படித்துவிட்டு வெளியேறும் பொறியாளர்களின் தகுதி குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய இன்ஃபோசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, இதுபோன்ற மதிப்புவாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்க்கை அனுமதி கோரும் மாணவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையை மறுஆய்வுசெய்வது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

நியுயார்க்கில் 'பான் ஐஐடி' உச்சிமாநாட்டில் முன்னாள் ஐஐடி மாணவர்களிடையே நாராயணமூர்த்தி உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். சமீபகாலமாக பொறியியல் மாணவர்களைத் தயார்செய்யும் பயிற்சி வகுப்புகள் காரணமாக ஐஐடிக்களில் நுழையும் மாணவர்களின் தகுதி மிகவும் மோசமடைந்துள்ளது என நாராயணமூர்த்தி தெரிவித்தார். பெரும்பாலான மாணவர்கள் தங்களின் பணிகளிலும், உயர் வகுப்பு பயிலும் பன்னாட்டு நிறுவனங்களிலும் தகுதி குறைந்தவர்களாகவே உள்ளனர் என அவர் கூறினார்.

80 சதவீத மாணவர்கள் கூட்டு நுழைவுத் தேர்வு மூலமாக எப்படியோ இடங்களைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் ஐஐடிக்கள், பணியிடங்கள் அல்லது உயர்கல்விக்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களுக்கு அவர்கள் வரும்போது அவர்கள் திறமை பயன்படுத்தப்படக்கூடிய அளவில் நன்றாக இல்லை. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். ஐஐடிக்கு மாணவர்களைத் தேர்வுசெய்வதில் புதிய முறையை ஏற்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...