|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 November, 2011

நாட்டின் 12 மாநிலங்களில் உள்ள 1,405 நகரங்களில், 50 சதவீத நகரங்களில் குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதி இல்லை!


நாட்டின் 12 மாநிலங்களில் உள்ள 1,405 நகரங்களில், 50 சதவீத நகரங்களில் குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதி இல்லை' என, அரசு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, துப்புரவு வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்டவை குறித்து மத்திய நகர்ப்புற அமைச்சகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. 12 மாநிலங்களில் உள்ள 1,405 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 50 சதவீத நகரங்களில் இந்த அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என, கண்டறியப்பட்டுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும். ஆனால், 50 சதவீத நகரங்களில் இந்த வசதி செய்து தரப்படவில்லை. இந்த நகரங்களில், 80 சதவீத வீடுகளில் ஐந்து மணி நேரத்துக்கும் குறைவான அளவே, குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகின்றன. இந்நகரங்களில் 70 சதவீத வீடுகளில் கழிவறை வசதியோ, கழிவுநீர் அகற்றும் வசதியோ இல்லை. மகாராஷ்டிராவில் 249 நகரங்கள் உள்ளன. இதில், நவி மும்பை மற்றும் மால்காபூரில் மட்டும் தான் 24 மணி நேர தண்ணீர் சப்ளை உள்ளது. பெரும்பாலான நகரங்களில் பாதாள சாக்கடையே கிடையாது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 19 இடங்களில் தான் உள்ளது. கர்நாடகாவில் 52 நகரங்களில் மட்டும் கழிவுநீர் அகற்றும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 124 நகரங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் வசதி செய்து தரப்படவில்லை.இந்த நகரங்களில் கழிவுநீர் அகற்றும் வசதியும் இல்லை. மத்திய பிரதேசத்தில் 46 சதவீத நகரங்களில் மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நகர்ப்புற நிர்வாகத்துறை இயக்குனர் சீனிவாஸ் சாரி குறிப்பிடுகையில், "பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நினைக்கும் அரசு, இது போன்ற அடிப்படை வசதிகள் விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்' என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...