|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 November, 2011

ஜாமின் மனுவை எதிர்க்கப் போவது இல்லை என, எந்த காரணத்தை அடிப்படையாக வைத்து முடிவு எடுத்தீர்கள்' சி.பி.ஐ.,யிடம், சுப்ரீம் கோர்ட்!


 கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேரின் ஜாமின் மனுவை எதிர்க்கப் போவது இல்லை என, எந்த காரணத்தை அடிப்படையாக வைத்து முடிவு எடுத்தீர்கள்' என, சி.பி.ஐ.,யிடம், சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர்கள் சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, ஹரி நாயர், கவுதம் தோஷி மற்றும் சுரேந்திர பிபரா ஆகியோருக்கு ஜாமின் அளிக்க, டில்லி சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது.ஆனாலும், தி.மு.க., எம்.பி., கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாகி சரத்குமார் மற்றும் ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால், கரிம் மொரானி உள்ளிட்டோரது ஜாமின் மனுவை எதிர்க்கப் போவது இல்லை என்றும் கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து, சஞ்சய் சந்திரா உள்ளிட்ட ஐந்து பேரும், ஜாமின் அளிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,"ஜாமின் அளிக்கும் விவகாரத்தில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், சி.பி.ஐ., சமமாக பார்க்க வேண்டும். ஆனால், எங்கள் ஐந்து பேருக்கும் ஜாமின் அளிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது' என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எச்.எல்.டாட்டு ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், "எந்த காரணத்தை அடிப்படையாக வைத்து, கனிமொழி உள்ளிட்டோரது ஜாமின் மனுவை எதிர்க்கப் போவது இல்லை என முடிவு செய்தீர்கள் என்பது குறித்து, நாளை (இன்று) கோர்ட்டில் பதில் அளிக்க வேண்டும்' என, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டனர். சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ்: டில்லி ஐகோர்ட்டில், ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில்,"ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தில், எங்களுக்கு 9.9 சதவீதத்துக்கும் குறைவான பங்குகளே இருந்தன. அந்த குறைவான பங்குகளும், ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதற்கு முன்பே விற்கப்பட்டு விட்டன. எனவே, ஸ்வான் நிறுவனம், எங்களின் துணை நிறுவனம் என்ற, சி.பி.ஐ.,யின் குற்றச்சாட்டு தவறானது. எனவே, ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்ய வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி முக்தா குப்தா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். ஆனாலும், தொலைத் தொடர்புத் துறை, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்ற, ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் கோரிக்கையை, நீதிபதி நிராகரித்து விட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...