|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 November, 2011

ஊருக்கு வெளியே இறக்கிவிட்ட பேருந்துக்கு ரூ.12,000 அபராதம்!


இரவு நேரத்தில் பயணியை ஊருக்கு வெளியில் இறக்கிவிட்டுச் சென்ற தனியார் பேருந்துக்கு ரூ.12,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ் காந்தி. இவர் தூத்துக்குடியில் வழக்கறிஞராக உள்ளார். இவர் கடந்த மே மாதம் 25ம் தேதி இரவு சமாதானபுரத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்ல ஒரு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

புதுக்கோட்டை வரையிலும் அவர் டிக்கெட் எடுத்திருந்த போதிலும் அந்த பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் அவரை புதுக்கோட்டைக்குள் இறக்கி விடாமல் வெளியே உள்ளே மெயின் ரோட்டில் இரவு 11 மணிக்கு கட்டாயப்படுத்தி இறக்கிவிட்டுச் சென்றனர். இதனால் மனவேதனை அடைந்த தங்கராஜ் காந்தி தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தனியார் பேருந்தின் சேவை குறைபாடு குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன், பயணியை வேண்டும் என்றே தவிக்க வைத்த தனியார் பேருந்து நிறுவனத்திற்கு ரூ.12,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.  இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...