|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 November, 2011

ஆரோக்கிய வாழ்க்கைக்கான ரகசிய மந்திரம்!


மனிதர்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க எண்ணற்ற நம்பிக்கைகளை கொண்டிருக்கின்றனர். நோய் தாக்கும் போது அவற்றை தணிக்க மருத்துவரை நாடுவது மட்டுமல்லாது இறை நம்பிக்கையின் படியும் வழிதேடுகின்றனர். ஜோதிட ரீதியாக ஆராய்ந்து அதற்கேற்ப பரிகாரங்களையும் செய்கின்றனர். அதன் மூலம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கின்றனர். 

உடல்நலமும் ஆரோக்கியமும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான மிகப்பெரியமத்திரம்  எதுவெனில் நாம் நலமாக இருக்கிறோம் என்ற நம்பிக்கைதான். நாம் உண்ணும் உணவை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். ஏனெனில் நமக்கான ஒவ்வொரு பருக்கையிலும் இறைவன் நம் பெயரை எழுதியிருப்பார் என்று என்று நம்முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உணவுக்காக பயிரிடும்போதும், உணவை உண்ணும் போது இறைவனை வழிபடுகின்றனர்.

மனதிற்கும் உடலுக்கும் யோகா நாம் உண்ணும் உணவு சக்தியாக மாறி உடலை ஆரோக்கியமாக்குகிறது. அதனை நோயின்றி, கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் உடற்பயற்சி  முக்கிய பங்கு வகிக்கிறது. யோகா பயிற்சியானது நமது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது பக்கவிளைவில்லாத ஆரோக்கியமான பயிற்சியாகும். காலம் காலமாக நம்முன்னோர்கள் மேற்கொண்ட பயிற்சியும் இதுதான். இயந்திரமயமாகி விட்ட இன்றைய சூழ்நிலையில் அலுவலகம், வீடு என எண்ணற்ற பணிகளுக்கிடையே சிக்கி தவிப்பதால் பலருக்கும் தேவையற்ற மன அழுத்தம் எற்படுகிறது. அதனைப்போக்க அமைதியான இசையை கேட்கலாம். மூச்சுபயிற்சி, மிதமான நடை என நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

கோள்களின் சேர்க்கை நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வானத்தில் உள்ள கோள்களும் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கின்றனர் ஜோதிடவியலாளர்கள். அந்த கிரகங்கள் சரியான இடத்தில் அமர்ந்தால் நமக்கு எந்த வித நோயும் ஏற்படுவதில்லை. அதேசமயம் ஒன்றுக்கொண்டு சரியில்லாத இடத்தில் அமர்ந்தாலோ நமக்கு விபத்து போன்ற ஆபத்துகள் ஏற்படுவதாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். கிரகங்களின் சேர்க்கையினாலேயே நம்முடைய வாழ்க்கையும், சரியான உறவுகளும் அமைவதாக தெரிவிக்கின்றனர்.

பரிகாரமும் பலன்களும் செவ்வாய் கிரகம் அக்னி ரூபமானது. இது காய்ச்சல், உள்ளிட்ட நோய்க்களை ஏற்படுத்தும். இந்த கிரகத்தின் பார்வை இருக்கும் போது குளிர்ச்சி தரும் உணவுகளை உண்பதும், அந்த உக்கிரத்தை சாந்திப்படுத்துவதற்கு உரிய கற்களை கொண்ட ஆபரணங்களை அணிவதும், அதற்குரிய மந்திரங்களை ஜெபிக்கவும் ஆலோசனை தெரிவிக்கின்றனர் ஜோதிடர்கள். இதன் மூலம் நோய்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...