|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 December, 2011

கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 25 பெண்கள் சிறையிலடைப்பு!

நெல்லையில் முக்கிய ரோடுகள், பஸ் ஸ்டாண்ட்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், கோயில்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதன் பேரில் சரணாலய இயக்குநர், மாநகர குழந்தைகள் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் உட்பட குழுவினர் நேற்று முன்தினம் பொது இடங்களில் பிச்சை எடுத்து திரிந்தவர்களை பிடித்தனர். இவர்கள் மீது போலீஸ் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர். இதனையடுத்து நெல்லை ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷனில் 10 குழந்தைகள், 11 பெண்கள் மீதும், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் 16 குழந்தைகள், 14 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கைது செய்யப்பட்ட 25 பெண்களையும் கைக்குழந்தைகளுடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கொக்கிரகுளம் கிளை சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு போதிய இடவசதி இல்லாததால் போலீசார் 25 பெண்களையும் திருச்சி சிறைக்கு வாகனத்தில் அழைத்து சென்று அடைத்தனர். இதுதவிர தனித்தனியாக பிச்சை எடுத்ததாக பிடிபட்ட 9 சிறுவர், சிறுமிகள் சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...