|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 December, 2011

சாம்பலே இது மெய்யடா!

இறந்தவர் உடலை அடக்கம் செய்வது அல்லது தகனம் செய்வது என்பது எல்லா நாட்டிலும் உள்ள சடங்கு. ஆனால் தென்கொரியாவில் சற்று வேறுபட்ட முறையில் இறந்தவர் உடலுக்கு இறுதி மரியாதை செய்கின்றனர். இறந்தவர் உடலை அடக்கம் செய்து அதற்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது அங்குள்ள மரபு. ஆனால் இப்போது உடல் தகனம் செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்கின்றனர். இதனால் சாம்பல் துகள்கள் மற்றும் எலும்புகள் உருகி, இறுகி சிறு சிறு உருண்டைகளாக, படிக மணி போல வெளிர்நீல நிறத்தில் உருமாறுகிறது. அதனைப் புத்தர் சிலையுடன் கூடிய கண்ணாடி குடுவையில் வைத்து மூடிவிடுகின்றனர். இதனைச் செய்வதற்கென்று தனி நிறுவனம் செயல்படுகிறது. உடல் சாம்பலில் இருந்து சுமார் 200-க்கும் அதிகமான உருண்டைகள் உருவாகின்றன. இதனால் முன்னோர்கள் இறந்த பின்னரும் தங்களுடன் வாழ்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்கின்றனர். இறந்து 20, 30 ஆண்டுகள் ஆனபிறகும் தோண்டி எடுத்து இதுபோன்ற மணிகளாக உருவாக்கி, வீட்டின் பூஜையறையில் வைத்துக்கொள்கின்றனர். தென்கொரிய நாட்டில் கல்லறைகளுக்கு 60 ஆண்டுகள் மட்டுமே அனுமதி. 60 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தைக் காலி செய்து கொடுக்க வேண்டும். இதனால் அந்நாட்டு அரசும் இந்தப் புதிய திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. ஆனால் இது போன்ற மணிகளை உருவாக்க சுமார் ரூ. 50 ஆயிரம் செலவாகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...