|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 December, 2011

மு.க.ஸ்டாலின் மீது நில அபகரிப்பு வழக்கு ஆந்திராவில் விசாரணை!

சென்னை ஆழ்வார் பேட்டையைச் சேர்ந்த சேஷாத்திரிகுமார், தனது வீட்டை அபகரித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து சேஷாத்திரி குமார் அளித்த புகாரில், எனது வீட்டுக்கு பத்திர பதிவு அதிகாரியை அழைத்து வந்து ஐதராபாத்தைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி என்பவரது பெயருக்கு எனது வீட்டை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டனர். தற்போது மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயரில் ஒப்பந்தம் போடப்பட்ட அந்த வீட்டில் ஸ்டாலினின் மகள் செந்தாமரை குடியிருந்து வருகிறார். எனது வீட்டை மிரட்டி வாங்கி அதற்காக ரூ. 5 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரத்துக்கு காசோலை கொடுத்தனர்.

 பின்னர் ஸ்டாலினுக்கு நெருக்கமான சீனிவாசன் என்பவர் ரூ. 1 கோடியே 15 லட்சம் பணத்தை தந்து இது கருப்பு பணம். வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டினார். இதனை மீறி செயல்பட்டால் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் மூலம் வருமான வரித்துறை சோதனை நடத்துவோம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால் ரெட்டி, ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, உதவி கமிஷனர் ஜேசுராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.   சேஷாத்திரி குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆதாரங்களை திரட்டி வரும் போலீசார் சம்பந்தப்பட்ட சார்பதிவாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐதராபாத்தைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டியின் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேஷாத்திரிகுமார் புகாரில் கூறியுள்ளதால் அவரிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். 

தொழில் அதிபரான இவர் பஞ்சாரா என்ற இடத்தில் வசித்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. வீடு அபகரிப்பு தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்தினால்தான் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது தெரியவரும். எனவே அவரிடம் விசாரித்த பின்னர் புகாரில் கூறப்பட்டுள்ள மற்றவர்களிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...