|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 December, 2011

அணைகள் பராமரிப்பை ராணுவத்திடம் ஒப்படைக்க கலாம் வேண்டும்.


 இந்தியாவில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் புதிதாக அமைக்கப்படும் அணைகள் ஆகியவற்றின் கட்டுப்பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடிதம் எழுதியுள்ளார். மேலும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம் எ‌ன்று ‌பிரதம‌ர் ‌ம‌ன்மோக‌‌ன் ‌சி‌‌ங்கு‌க்கு கலாம் யோசனை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக பிரதமரு‌க்கு அவ‌ர் எழுதியு‌ள்ள கடித‌த்‌தி‌ல், கேரளாவுக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொண்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம். நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணைகள் இவற்றின் கட்டுப்பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், நதிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளின்போது, எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னையால் இரு மாநில உறவும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காத்து, தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்ட வேண்டும் எ‌ன்று கலாம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...