|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 December, 2011

குறைவான மதிப்பெண் வங்கிக் கடன் கிடைக்காது...

மதிப்பெண் குறைவாக எடுத்ததால், கல்விக்கான வங்கிக் கடன் வழங்க உத்தரவிட இயலாது'' என, மாணவரின் மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த காசிநாதன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான், நத்தம் என்.பி.ஆர்., கல்லூரியில், எம்.பி.ஏ., சேர்ந்தேன். ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் கல்விக் கடன் கேட்டு, கனரா வங்கியில் விண்ணப்பித்தேன். நான், பி.பி.ஏ., படித்தபோது, 48.04 சதவீதம் மதிபெண் பெற்றதால், வங்கிக் கடன் வழங்க இயலாது எனவும், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தான், கடன் வழங்க இயலும் எனவும் கூறி, விண்ணப்பத்தை வங்கி நிராகரித்தது.நான், எம்.பி.ஏ., முதலாண்டில், 77 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளேன். எனவே, எனக்கு வங்கிக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இம்மனு, நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. "வங்கி விதிமுறைப்படி, 60 சதவீதம் மதிப்பெண் பெறாததால், கடன் வழங்க உத்தரவிட இயலாது' எனக் கூறி, மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...