|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 December, 2011

பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஐபிஎஸ்...டெல்லியில் ஐபிஎஸ் தேர்வுக்காக படித்த போது, உடன் படித்த ஐபிஎஸ் அதிகாரி தன்னை காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகள், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளி்த்துள்ளார். சென்னை, வளசரவாக்கத்தை அடுத்த கனகதாரா நகரை சேர்ந்தவர் கோகுல்சங்கர். சென்னை உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் முதல் மகளுக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு கோகுல்சங்கர் தனது 2வது மகள் பிரியதர்ஷனி, மனைவி லட்சுமி உள்ளிட்டோருடன் வந்தார். கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார்.

இது குறித்து கோகுல்சங்கர் கூறியதாவது, நான் சென்னையில் துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். எனது 2வது மகள் பிரியதர்ஷினி பி.ஏ., எம்எஸ்சி பட்டபடிப்பு முடித்துள்ளார். என்.சி.சி.யில் இந்திய அளவில் முதலிடம் வந்த பிரியதர்ஷினி, போலீஸ் அதிகாரியாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஐ.பி.எஸ். தேர்வு எழுதுவதற்காக பிரியதர்ஷினி டெல்லியில் தங்கி படித்தாள். அப்போது அவளுடன் படித்த ஒரு நபரை காதலித்தாள். திருச்சியை சேர்ந்த அந்த நபரின் பெற்றோர் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இரு குடும்பத்தினரும் காதலை ஏற்று கொண்டு, திருமணம் செய்து வைக்க தீர்மானித்தோம். ஐ.பி.எஸ். தேர்வில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பெற்று வெற்றி பெற்ற அந்த நபர், தற்போது பயிற்சியில் உள்ளார்.

இந்த நிலையில் அந்த நபரின் குடும்பத்தினர், எங்களுடனான தொடர்பை துண்டித்து கொண்டனர். இந்த மாதம் திருமண நிச்சயம் செய்ய இருந்த நிலையில், தற்போது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இன்னோரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

எனது உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரிடமும் அந்த நபர் தான் எனது மகளின் வருங்கால கணவன் என்று அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த நிலையில் எனது மகளை காதலித்து ஏமாற்றிய, அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன், என்றார்.

இது குறித்து பிரியதர்ஷனி கூறியதாவது, என்னை காதலி, மனைவி என்று ஆசை தீர அழைத்துவிட்டு தற்போது ஓதுக்கி உள்ளனர். செல்போனில் பல மணி நேரங்கள் பேசியும், எஸ்எம்எஸ்கள் அனுப்பியும் காதலை வளர்த்தார். நல்ல வேளை எனது மனதை மட்டுமே அவரிடம் தொலைத்தேன். கற்பை இழந்திருந்தால் இந்த புகார் கொடுக்க கூட தகுதி இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். எனது வாழ்க்கை போனாலும் பரவாயில்லை, அவரது முகமூடியை கிழித்து, ஐ.பி.எஸ். அதிகாரியாக, அவர் எந்த வகையிலும் தகுதி இல்லாதவர் என்பதை நிரூபிப்பேன்.என்னை திருமணம் செய்து கொள்ள 2 கிலோ தங்க நகை, ரூ.50,000 ரொக்கப் பணம், பி.எம்.டபில்யூ கார் உள்ளிட்டவை வரதட்சனையாக தர வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதனை தர எங்களால் முடியவில்லை. எனவே என்னை அவர் ஏமாற்றிவிட்டார். இனி அவர் சமாதானமாகி என்னை ஏற்று கொள்ள வந்தால் கூட நான் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கமாட்டேன், என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...