|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 January, 2012

தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது வெல்லும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் பெரும் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, டெஸ்ட் போட்டித் தொடரையும் இழந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி, 161 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 171 ரன்களும் எடுத்தது. ஆனால் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியைச் சந்தித்தது.  இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது இந்திய அணி. தோல்விக்கு நானே பொறுப்பு: இந்நிலையில்,  தொடர் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் தோனி,  இது இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான கட்டம். கேப்டன் என்ற முறையில் இந்திய அணியின் தோல்விக்கு என்னைத்தான் குறை கூற வேண்டும். இந்தத் தோல்விக்கு நானே முக்கியக் காரணம். இவ்வளவு மோசமான தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன் என்றார்.
தோனிக்கு ஒரு போட்டியில் தடை:  மேலும், 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மெதுவாகப் பந்து வீசியதற்காக ஒரு டெஸ்ட் போட்டியில் தோனி விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...