|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 January, 2012

பலம் தரும் சாத்துக்குடி!

மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான புரதம், கால்சியம், நார்ச்சத்து, உயிர்சத்து, போன்றவை பழங்களில் அதிகம் காணப்படுகின்றன. உடலுக்கு நேரடியாக சத்துக்களை கொடுப்பவை பழங்கள் மட்டுமே. உண்ணும் உணவு எளிதாக ஜீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதிகளில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் பழங்கள் உதவிபுரிகின்றன. சீதோஷ்ண காலங்க்ளில் விளையும் பழங்களை உண்டாலே உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அந்த வகையில் சாத்துக்குடி பழம் உடலுக்கு பலத்தை தருவதோடு ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் என்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம் நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பார்ப்பதற்கு காய்போல பச்சையாகவே காணப்படும். ஆனால் சுளைகள் இனிப்பாக இருக்கும். சாத்துக்குடியில் பி உயிர்ச்சத்தும், இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் காணப்படுகின்றன.

எலும்பு வளர்ச்சி கால்சியம் சத்து குறைபாட்டினால் எலும்பு, பற்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். அவர்களுக்கு சாத்துக்குடி ஏற்றது. சாத்துக்குடியை தினசரி உட்கொள்வதன் மூலம் உடல் பலம் பெறுவதோடு எலும்பு வளர்ச்சியடையும். பசியை தூண்டும் வயிறு மந்தமாக பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் தினசரி இரண்டு சாத்துக்குடி சாப்பிட ஜீரணசக்தி அதிகரித்து பசி உண்டாகும். வயதானவர்களுக்கு உணவை செரிமானத்தை அதிகரிக்கும், மலச்சிக்கலை போக்கும் நினைவாற்றலை அதிகரிக்கும். மறதி நோயால் அவதிப்படுபவர்களுக்கு சாத்துக்குடி அருமருந்தாகும். தினசரி சாத்துக்குடி ஜூஸ் பருகி வர நினைவாற்றல் அதிகரிக்கும். 

நோயாளிகளுக்கு ஏற்றது. நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் இரண்டு வேளை சாத்துக்குடி சாறு பருகினால் புத்துணர்ச்சி ஏற்படுவதோடு, உடலுக்கு வலு உண்டாகும். சாத்துக்குடி ரத்தத்தில் எளிதில் கலப்பதால் விரைவில் உடல் நலமடையும்.  சோர்வைப் போக்கும் சிலர் எப்போதும் சோர்வாக இருப்பர். அசதியினால் தலைசுற்றலுடன் மயக்கம் ஏற்படும். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும். ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்தசோகையை போக்கும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...