|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 February, 2012

கோவா திரைப்பட விழாவில் பங்குபெற்ற "தி ஆர்டிஸ்ட்'

  1. இம்முறை, ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், மவுனப் படமான "தி ஆர்டிஸ்ட், அயர்ன் லேடி, ஹ்யூகோ, தி டிசண்டன்ட்ஸ், மிட் நைட் இன் பாரிஸ் ஆகிய படங்கள் முன்னணியில் இருந்தன.சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்கம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகியவற்றிற்காக, ஐந்து ஆஸ்கர் விருதுகளை, "தி ஆர்டிஸ்ட்' படம் வென்றது. அதே போல், கலை இயக்கம், சவுண்டு மிக்சிங், எடிட்டிங், விஷுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்டவற்றிற்காக, "ஹ்யூகோ' படம், ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றது.மூன்றாவது விருதுமுன்னாள் பிரிட்டன் பிரதமரான மார்கரெட் தாட்சரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும், "அயர்ன் லேடி' படத்தில், தாட்சர் வேடத்தில் நடித்த மெரில் ஸ்ட்ரீப்புக்கு, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் கிடைத்தது. இது, இவர் பெறும் மூன்றாவது ஆஸ்கர் விருது என்பது குறிப்பிடத்தக்கது.ஈரான், பாகிஸ்தான் படங்கள்சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்திற்கான விருதை, ஈரானின் "ஏ செபரேஷன்' படம் வென்றது. மிகச் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை, பாகிஸ்தானின் "சேவிங் பேஸ்' குறும்படம் பெற்றத

  1. பாகிஸ்தானில், பெண்கள் மீது நடத்தப்படும் ஆசிட் வீச்சு குறித்து எடுக்கப்பட்ட படம் தான் "சேவிங் பேஸ்'. பிரான்சில் தயாரிக்கப்பட்ட "தி ஆர்டிஸ்ட்' படம், 1927 முதல் 1932 வரையிலான காலகட்டத்தில், ஹாலிவுட்டில் நடக்கும் திரையுலக மாற்றங்களால் பாதிக்கப்படும் மவுனப் பட கதாநாயகனை மையமாகக் கொண்டது.பொதுவாக, ஹாலிவுட் படங்கள் தான், சிறந்த படம் உள்ளிட்டவற்றுக்கான ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் செல்லும். இதற்கு மாறாக, இம்முறை பிரெஞ்சு படம் ஐந்து ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஹ்மான் கச்சேரி: இவ்விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு, இசைக் கச்சேரி நிகழ்த்தினார். "127 ஹவர்ஸ்' படத்தில், தான் இசையமைத்த பாடல்களை அங்கு பாடினார். ரிலையன்ஸ் தொழிலதிபர் அனில் அம்பானியும் கலந்து கொண்டார். "தி ஹெல்ப், வார் ஹார்ஸ், ரியல் ஸ்டீல்' ஆகிய படங்களைத் தயாரித்த, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் "ட்ரீம் வொர்க்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனத்தில், 51 சதவீதம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பங்குகளை வைத்துள்ளது.ஈரானில் கொண்டாட்டம்; ஈரானின் பாரசீக மொழியில் எடுக்கப்பட்ட, "ஏ செபரேஷன்' படம், ஈரானிய நடுத்தர குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை மையமாகக் கொண்டது. நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் குடியேற வேண்டும் என விரும்பும் மனைவி, அல்ஜமீர் என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது தந்தையை விட்டு விட்டு வரத் தயங்கும் கணவன் இடையிலான பிரச்னைகளை, இப்படம் உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கிறது. சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்திற்கான ஆஸ்கர் விருதை, இப்படம் பெற்றிருக்கிறது என்ற தகவல் வெளியானதும், ஈரானில் மக்கள் மத்தியில், மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தது.இஸ்ரேல் படமான, "பூட்நோட்' என்ற படமும், ஆஸ்கருக்கு வந்திருந்தபடியால், இந்த வெற்றி இஸ்ரேலுக்கு எதிரான வெற்றியாக அங்கு சித்திரிக்கப்படுகிறது. அதோடு, ஈரானிய பண்பாட்டுக்கு, அமெரிக்காவில் கிடைத்த வெற்றி எனவும், ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஈரானில், செயற்கைக்கோள் வழியான வெளிநாட்டு சேனல்கள் தடை செய்யப்பட்டிருப்பதால், தேசிய தொலைக்காட்சி, செபரேஷன் படத்திற்கான விருது வழங்கும் காட்சிகளை, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...