|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 March, 2012

சேனல் 4 நிறுவனத்திடம் பிரபாகரன் குறித்த முக்கிய வீடியோ.

லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி நிறுவனத்திடம் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த முக்கிய வீடியோவும் கிடைத்துள்ளதாக டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மிகக் கொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.


பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்தரின் மிக மிக நெருக்கமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், அதுதொடர்பான வீடியோ காட்சியை ஒளிபரப்பப் போவதாக சானல் 4 நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த வீடியோ காட்சியில் பிரபாகரன் குறித்த முக்கிய காட்சியும் இடம் பெற்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இலங்கையின் கொலைக்களங்கள் என்ற பெயரில், 2 ஆண்டுக்கு முன்பு, இலங்கையில் நடந்த போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள், படுகொலைகள் குறித்த ஆவணப்படத்தை சேனல் 4 ஒளிபரப்பியது. தற்போது அதன் தொடர்ச்சியாக இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற பெயரில் புதிய ஆவணப்படத்தை அது தயாரித்துள்ளது.


அதில்தான் பாலச்சந்திரன் படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதிலேயே பிரபாகரன் குறித்த காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மணி நேரம் ஓடக் கூடிய இந்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பரிசோதித்து இவை உண்மைதான் என்று தெரிவித்துள்ள தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பெளன்டர் , சேனல் 4 நிறுவனத்திற்கு பாலச்சந்திரன் படுகொலைச் சம்பவம் தவிர்த்து அவனது தந்தை பிரபாகரன் குறித்த ஒரு படமும் கிடைத்தது. அதில் பிரபாகரனின் தலையில் மிக பலத்த காயம் காணப்பட்டது. அவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது என்றார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...