|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 March, 2012

ஐயா யோக்கியவான் (மண்ணு மோகன் ) உள்நாட்டு மீனவன காப்பாத்த துப்பு இல்ல... இதுல இலங்கை தமிழர்களா!

இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்வதே நமது நோக்கம்  கலைஞருக்கு மன்மோகன்சிங் கடிதம்



தி.மு.க. தலைவர் கலைஞருக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,  ‘’ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி மார்ச் 9-ந் தேதியிட்ட தாங்களின் கடிதத்துக்கு இந்த பதில் கடிதம் அனுப்பப்படுகிறது. இலங்கை வாழ் தமிழர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு, முன்னேற்றம் இவற்றில் இந்தியா உயர் முக்கியத்துவம் கொடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.   கடந்த 2009-ல் இனப்போர் முடிவுக்கு வந்ததும் அங்குள்ள தமிழ்களுக்கு அரசியல் ரீதியானதீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசை இந்தியா இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறது. 

இடம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் விரைவிலேயே சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவசரகால சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச அமைப்பின் மூலம் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.  போரில் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ் குடும்பங்களுக்கும் மனிதாபிமான உதவிகளை செய்ய வேண்டும். தமிழர் பகுதியில் இயல்பு நிலை திரும்ப தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
 
அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய அரசும் தேவையான உதவிகளை செய்து வருகிறது. வீடு கட்டி கொடுத்தல், கல்வி, சுகாதாரம், தொழில் பயிற்சி, விவசாயம், கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்தல் போன்ற திட்டங்களில் இந்தியாவும் பங்கெடுத்துள்ளது. இந்தியா மேற்கொண்ட முயற்சிகளால் தமிழர் பகுதியில் இயல்புநிலை திரும்பி உள்ளாட்சி தேர்தலும் நடைபெற்றுள்ளது. இலங்கை அரசு மேற்கொண்டு வரும் மறுவாழ்வு திட்டங்கள் தொடர்பான அறிக்கையை இந்திய அரசு வரவேற்றுள்ளது. மனித உரிமைகள் மீறல் தொடர்பாக, சுதந்திரமான, விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நாம் இலங்கை அரசை மீண்டும் வலியுறுத்தி உள்ளோம்.   ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நமது குறிக்கோள் எல்லாம் இலங்கை தமிழர்களின் எதிர்காலத்தை பற்றிய தாகவே எப்பொழுதும் இருந்து வருகிறது. இலங்கை தமிழர்கள் சமத்துவம், கவுரவம், சமநீதி, சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்வதே நமது நோக்கம் ஆகும்’’ என்று எழுதியுள்ளார். 
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...