|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 March, 2012

இன்டர்நெட்லும் இனி டிவி பார்க்கலாம்!

இன்டர்நெட் டிவி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது இன்டல் நிறுவனம். தகவல்களையும், வீடியோக்களையும் பார்க்க பயன்படுத்தப்பட்டு வந்த இன்டர்நெட் சேவையில், இனி டிவியையும் பார்க்கலாம். இந்த இன்டர்நெட் டிவி திட்டம், கேபில் ஆப்ரேட்டர்களுக்கெல்லாம் ஒரு நெருக்கடியை உண்டு செய்யும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இது சம்மந்தமாக இன்டல் நிறுவனம் மற்ற மீடியாக்களிடம், ‘வெர்ச்சுவல் கேபில் ஆப்பரேட்டர்’ பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றது. நவீன வாழ்க்கைக்கு பழகிய அனைவரும் எந்த நேரமும் இன்டர்நெட் முன்பு தான் இருக்கின்றனர்..இனி இன்டல் நிறுவனம் முயற்சி செய்து வரும் இந்த இன்டர்நெட் டிவி சேவை வந்துவிட்டால் அனைவரும் எப்பொழுதும் இன்டர்நெட் முன்பு தான் இருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது. 2012-ஆம் ஆண்டு இந்த இன்டர்நெட் டிவி சேவையை இன்டல் நிறுவனம் வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...