|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 March, 2012

ரெயில்வே பட்ஜெட் தமிழக பயன்கள்.

2012-13 ரெயில்வே பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்கள்: 

* சென்னை பறக்கும் ரெயில் திட்டம் 2013ம் ஆண்டு செயல்பட தொடங்கும்.

* தமிழ்நாட்டிற்கு 11 புதிய ரெயில்கள் இயக்கப்படும்.

* விழுப்புரம் மயிலாடுதுறையிடையே தினசரி புதிய ரெயில்.

* சென்னை பெங்களூர் இடையே குளிர் சாதன ரெயில் சேவை.

* மன்னார்குடி திருச்சி மானாமதுரை இடையே புதிய பயணிகள் ரெயில் இயக்கப்படும்.

* சென்னை விசாகப்பட்டிணம் வாராந்திர புதிய ரெயில் இயக்கப்படும்.

* திருச்சி நெல்லையிடையே தினசரி இண்டர்சிட்டி புதிய ரெயில்.

* விழுப்புரம் காட்பாடி இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்.

* ஈரோடு கோவை வழியாக புதிய தாதர் திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ்.

* சென்னை பூரி இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ்.

* கோவையிலிருந்து அகமதாபாத், ஜோத்பூர் வழியாக பிகானிருக்கு புதிய எக்ஸ்பிரஸ்.

* மன்னார்குடி திருப்பதி வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை.

* திருப்பதி மதுரை எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு.

* சென்னை சாலிமர் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ்.

* மங்களூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் கோவை வரை நீட்டிப்பு.

* மங்களூர் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு.

* திருச்சி நாகூர் பயணிகள் எக்ஸ்பிரஸ் நாகப்பட்டிணம் வரை நீட்டிப்பு.

* மதுரை திருப்பதி வாரம் 2 நாள் இயங்கும் எக்ஸ்பிரஸ் 3 நாட்களாக அதிகரிப்பு.

* அரக்கோணம் நந்தலூர் ரெயில் கடப்பா வரை நீட்டிப்பு.

* நிஜாமுதீன் கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் வாரம் 2 முறை இயக்கப்படும். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...