|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 March, 2012

தமிழகத்தில் பாடாய் படுத்தும் கள்ளக்காதல்... நெதர்லாந்து பெண் மாமல்லபுரத்தில் மரணம்!


நெதர்லாந்து பெண்ணை கொலை செய்த வழக்கில், அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ரெம்கோ எலிசபத் மார்ட்டின் ஜோசப்,32. படகு மெக்கானிக். அதே நாட்டைச் சேர்ந்தவர் ஜோகானா கார்னிலியா லாம்பெர்டோ,35. இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர். ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆண்டுதோறும் வழக்கமாக இந்திய சுற்றுலா வரும் இவர்கள், கடந்த 10ம் தேதி சென்னை வந்தனர்.
செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள்கோவிலில், ஏற்கனவே அறிமுகமான நவநீதம்மாள் என்பவர் வீட்டில் தங்கினர். பின் கடந்த 20ம் தேதி, மாமல்லபுரத்தில் தனியார் கடற்கரை விடுதியில் தங்கினர். மறுநாள், பகல் 12 மணிக்கு, மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம் மீனவர் குப்பத்தில் அப்துல் அமீது என்பவர் வீட்டில் தனியாகத் தங்கியிருந்தனர்.


மழுப்பலான பதில் :கடந்த 22ம் தேதி, ரெம்கோ சிங்கபெருமாள்கோவிலுக்குச் சென்றார். நவநீதம்மாள் அவரிடம், ஜோகானாவை ஏன் அழைத்து வரவில்லை என கேட்டார். அதற்கு சரியான பதில் கூறாமல் அங்கிருந்து நழுவினார். அதன்பின், 23ம் தேதி காலை 10 மணிக்கு, மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் காதலி இறந்து விட்டதாகத் தெரிவித்தார். ஜோகானாவின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. வீட்டில் லேப்டாப், கேமரா, மொபைல்போன், பெண்கள் கருத்தடை சாதனம், போதை மருந்து ஊசிகள் சிதறிக் கிடந்தன. சுவரில் ரத்தக்கரை படிந்திருந்தது. மோப்ப நாயை வரவழைத்து போலீசார் சோதனை செய்தனர். மோப்பநாய் வீட்டிற்குள்ளேயே சுற்றி வந்தது.

சந்தேகம்:இதையடுத்து, ரெம்கோவிடம் போலீசார் விசாரித்தனர். 21ம் தேதி இரவு சிலர் தன்னைத் தாக்கிவிட்டு வீட்டிற்குள் புகுந்ததாகவும், தான் மயங்கி விட்டதால் நடந்த விவரம் எதுவும் தெரியாது என்றும் கூறினார். முன்னுக்குப்பின் முரணாகக் கூறியதால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.மாமல்லபுரத்திலும், வெண்புருஷத்திலும், பொதுமக்களிடம் போலீசார் விசாரித்தனர். இவர் அடிக்கடி போதையில் காதலியிடம் தகராறு செய்தது தெரியவந்தது. கடந்த 22ம் தேதி, ஒரு சூட்கேசுடன் வெளியேறியதும் தெரியவந்தது. இந்த தகவல்களால் சந்தேகம் அதிகமான போலீசார், துருவித் துருவி விசாரித்தும் உண்மையை ஒப்புக் கொள்ளவில்லை. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஜோகானாவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில், அவரது தலை, மார்பு ஆகிய இடங்களில் உள்காயம் ஏற்பட்டிருந்ததும், விலா எலும்பு உடைந்திருந்ததும், வயிற்றுப்பகுதியில் ரத்தம் கட்டியிருந்ததும் தெரிந்தது. அவர் கடுமையாகத் தாக்கப்பட்டு இறந்தது உறுதியானது. தீவிரமாக விசாரித்தபோது, ஜோகானாவை தாக்கியதை ஒப்புக் கொண்டார்.

போதையில் தகராறு:தாக்கியதற்கு கள்ளக்காதலும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது. மாமல்லபுரம் அடுத்த, மணமை கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் ஏற்கனவே நெதர்லாந்து காதலர்களுக்கு அறிமுகமாகியிருந்தார். அவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மோகன் மனைவி வள்ளியுடன், ரெம்கோவிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் சந்தித்துள்ளனர். மாமல்லபுரம் வந்தவுடன் ரெம்கோ, வள்ளியைத் தேடியுள்ளார். அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டதாகத் தெரியவந்தது. இதனால் விரக்தியடைந்த ரெம்கோ,போதை மருந்து ஊசிகளைப் பயன்படுத்தியுள்ளார்.

கடந்த 21ம் தேதி, மாலை பயணத் திட்டம், பணச் செலவு, வள்ளியுடன் தொடர்பு ஆகியவை பற்றி ஜோகானா, ரெம்கோ இடையே விவாதம் நடந்துள்ளது. இதில் கடும் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியுள்ளது. தாக்குதலில் ஜோகானா இறந்துள்ளார். கொலையை மறைத்து, தப்பிக்க ரெம்கோ முயன்றுள்ளார். நெதர்லாந்து நாட்டில் உறவினர்களிடம் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துள்ளார். அவர்கள் போலீசாரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியதால், மீண்டும் வந்து போலீசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து, ரெம்கோவை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் கூடுதல் எஸ்.பி., பாஸ்கரன் கூறும்போது, ""வெளிநாட்டுப் பயணி என்பதால் கவனத்துடன் விசாரித்தோம். அவர் கொலை செய்ததை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், அவர் தான் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால், அவரை கைது செய்துள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...