|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 March, 2012

விரைவில் இலங்கை மீது பொருளாதாரத் தடை...


பொருளாதாரத் தடையை மீறி ஈரானிடமிருந்து தொடர்ந்து எரிபொருள் இறக்குமதி செய்து வரும் இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.அணு ஆயுத பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எரிபொருள் இறக்குமதி செய்யக்கூடாது என உலக நாடுகளை எச்சரித்துள்ளது. இருந்தும் இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தைவான் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் கச்சா எண்னை மற்றும் எரிபொருளை அதிகளவில் இறக்குமதி செய்து வருகின்றன.எனவே இந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதன் நடவடிக்கையாக இலங்கை மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் இந்த நிர்பந்தத்தை சீனா வன்மையாக கண்டித்துள்ளது 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...