|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 March, 2012

சன் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ்!

கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக செய்தி ஒளிபரப்பிய சன் டிவிக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இது குறித்து கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தரப்பில் கூறப்படுவதாவது, உதயகுமாருக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கடந்த 24-03-12 அன்று 6.30 மணி முதல் சன் டிவியில் ஒளிபரப்பான செய்தி அவதூறானது, உள்நோக்கம் கொண்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஸ், விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, அணு உலை எதிர்ப்பாளர் முகிலன் போன்றவர்களை எந்த வித காரணமும் இன்றி காவல் துறை கைது செய்தது. இதன் பின்னணி என்ன என்று விசாரித்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டது. அதாவது அணு உலைக்கு எதிரான இந்த போராட்டம் இப்போது சர்வதேச அளவில் ஒரு செய்தியாக உருவானதால் தமிழக அரசுக்கு இது பெருத்த அவமானத்தை தேடித் தந்ததுள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கூடங்குளத்தை இப்போது உற்று நோக்கிக் கொண்டிருகின்றன. எந்த வழியில் அணு உலை போராளிகளை சிக்க வைக்கலாம் என்று குழம்பிப் போன அரசு இப்போது அணு உலை போராளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்ற கட்டுக் கதையை அவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளது.
அதன் விளைவாக தான் சதீஸ், வன்னி அரசு கைது நாடகம். இவர்கள் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதால் இவர்களை தீவிரவாதிகளாக காட்டி இவர்களுக்கும் உதயகுமாருக்கும் தொடர்பு இருப்பதாக அரசு ஒரு சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்ச்சியில் சன் டிவி யும் முக்கிய பங்கேற்பாளராக உள்ளதால் இந்த தொலைக்காட்சி தொடர்ந்து உதய குமாருக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்கிறது. இந்த பொய்யை முறியடிக்கும் வகையில் உதயகுமார் சன் நிறுவனம் இந்த செய்தி தவறானது என்று மன்னிப்பு கேட்டு தினகரன் நாளிதழில் அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தனது வக்கீல் மூலம் சன் தொலைக்காட்சிக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...