|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 January, 2013

ப.சிதம்பரம் மீது 'ஐபிசி 420' வழக்கு!


தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீசாருக்கு ஆந்திர மாநில ரெங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ரெங்காரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஆந்திர பிரதேச இளநிலை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை தாமதிக்கும் வகையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து முன்னாள் உள்துறை அமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் தற்போதைய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் ஏமாற்றியுள்ளனர் என்றும் இருவர் மீதும் நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தப்பட்டது. 
இந்த மனுவை விசாரித்த ரெங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தது. இவர்கள் இருவர் மீது இ.பி.கோ. 420-வது கீழ் மோசடி வழக்குப் பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தெலுங்கானா விவகாரம் 'விஸ்வரூபம்' எடுத்து ஆந்திராவை கொந்தளிப்பாக்கியுள்ள சூழலில் ஆந்திர நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...