|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 January, 2013

காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பை மதித்து செயல்படுத்தவில்லை?


காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மதித்து செயல்படாத கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்தது. தமிழகத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பற்ற 12 டி.எம்.சி. நீரையாவது தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான ஜெயின் ஓய்வு பெறுவதால் இன்று அது விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் 12 டி.எம். நீர். கோரி வாதிடப்பட்டது. ஆனால் கர்நாடகா இதை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து 6 டி.எம்.சி. நீரையாவது தமிழகத்துக்கு திறந்துவிட முடியுமா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டனர். 
 
ஆனால் கர்நாடகாவோ தங்களது குடிநீர் தேவைக்கே 15 டி.எம்.சி.நீர் தேவை என்று கூறியது. இதனால் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகா மதித்து செயல்படுத்தவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும் 1992ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவின் குடிநீர் தேவை என்ன என்பதை அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் காவிரி கண்காணிப்புக் குழுவின் செயல்பாடும் திருப்தி இல்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். இதைத் தொடர்ந்து தமிழக அரசின் மனு மீது நாளை பிற்பகல் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...