|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 February, 2013

எழுத்து அறிவு இல்லாத, 50 லட்சம் பேர்!

இந்திய மக்களில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி அறிவு இல்லை; அவர்களை கல்வி அறிவு பெற்றவர்களாக்க, நம் அரசு பெரும் முயற்சி எடுத்து வருவது நாம் அறிந்ததே! முதியோர் கல்வி, கரும்பலகை என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.  இந்தியாவிலேயே, கேரள மாநிலம் தான் முழுமையான கல்வி அறிவு பெற்ற மாநிலம் என அறிவிக்கப்பட்டு உள்ளது; தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் முழுமையான கல்வி அறிவு பெற்றவர்கள். நம் நாட்டு கதை இப்படி இருக்க, முன்னேறிய நாடுகளின் வரிசையில் நிற்கும் கனடா நாட்டின் கதை?
 
கனடா நாட்டு மக்களில், 50 லட்சம் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது! (கனடாவின் மொத்த மக்கள் தொகை, இரண்டு கோடி 70 லட்சம். இவர்களில் படிக்கத் தெரியாதவர்களின் சதவீதம் 19.) கல்வி அறிவு இல்லாத கனடாக்காரர்களில், 15 லட்சம் பேருக்கு, தம் கார் டிரைவிங் லைசன்ஸ் எப்போது காலாவதியாகிறது என்பதை, லைசன்ஸ் புத்தகத்தைப் பார்த்து அறிந்து கொள்ளும் திறமை கிடையாது! இவர்களில் 26 லட்சம் பேருக்கு, மருந்து, மாத்திரை பாட்டில்களில், அவற்றை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளும் திறன் கிடையாது!
 
சாலையில் உள்ள வழிகாட்டும் சின்னங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களைப் படித்து அறியும் திறன், 28 லட்சம் பேரிடம் இல்லை!இன்னும் சில லட்சம் பேரிடம் டெலிபோன் பில்லைப் பார்த்து, அதில் பண பாக்கி எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளும் திறன் கிடையாது. இதேபோல, இன்கம்டாக்ஸ் பாக்கி அறிதல், டெலிபோன் டைரக்டரியில், "எல்லோ பேஜ்' பார்த்து, முகவரி அறிதல் போன்றவை தெரியாது, என்றார். (என்னடா இது... எழுதப் படிக்க தெரியாதவர் எண்ணிக்கை, 50 லட்சம் தான் என்றார். இவர் சொல்லும் 26 லட்சம், 28 லட்சம் இன்னும் சில லட்சம் என லட்சக்கணக்கில் சொல்லிக்கொண்டே போகிறாரே... அப்படியானால், கனடா நாட்டு மக்கள் எவருக்கும் கல்வி அறிவு இல்லையா? சிறு விளக்கம்: எழுத்து அறிவு இல்லாத, 50 லட்சம் பேரில், இந்த இந்தத் தொகுதிகளில், அதாவது, சாலை விதி அறிவிப்புப் பலகை படிக்கத் தெரியாதவர், மருந்து பாட்டிலில் எழுதியுள்ளதைப் படிக்கத் தெரியாதவர்... என இவை கணக்கிடப்பட்டுள்ளது. ஆக, மொத்தம் படிப்பறிவில்லாதவர் எண்ணிக்கை, 50 லட்சம் தான்!)

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...