|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 February, 2013

திரும்பி வந்தால் அடித்தே கொல்லனும்!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள வன்னியம்பட்டி -  படிக்காசுவைத்தான்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி. கூலி வேலை பார்க்கும் இவரது மகள் ராஜேஸ்வரி அங்குள்ள வன்னியம்பட்டி நாடார் உறவின்முறை காளீஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார். இவரது தங்கை கவிதா 10-வது வகுப்பு படிக்கிறார். ராமசாமியின் வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார் ஆதிசக்தி குழந்தைவேல்.  இவருக்கு வயது 35. இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஆதிசக்தி குழந்தைவேல் ப்ளஸ் 2 மாணவி ராஜேஸ்வரியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.  இன்று காலை பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த ராஜேஸ்வரியை தன் வீட்டுக்கு வற்புறுத்தி இழுத்துச் சென்ற ஆதிசக்தி குழந்தைவேல் தன் காதலை தகாத முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் பயந்து போன ராஜேஸ்வரி இவரது காதலை ஏற்க மறுத்து கத்தியிருக்கிறார்.  இதனால், ஆத்திரமடைந்த ஆதிசக்தி குழந்தைவேல் வீட்டில் இருந்த மண்ணெண்ணய்யை ராஜேஸ்வரி மீது ஊற்றி தீ வைத்துக் கொளுத்தி விட்டார்..  
தீயில் வெந்து துடித்த ராஜேஸ்வரியின் அலறல் சத்தத்தைக் கேட்டு தங்கை கவிதா ஓடி வந்து பார்த்திருக்கிறார்.  ராஜேஸ்வரி எரிவதை கவிதா பார்த்துவிட்டது ஆதிசக்தி குழந்தைவேலுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   ஊருக்குள் விஷயம் தெரிந்தால் தனக்கு ஆபத்து என்று கருதிய அவர் தன் மீதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொள்ள.. அக்கம் பக்கத்தினர் வன்னியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்த போது கவிதா இறந்து பிணமாகக் கிடந்தார். ராஜேஸ்வரியின் உயிரற்ற உடலையும்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதிசக்தி குழந்தை வேலுவையும் போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  உடலில் தீக்காயம் அதிகமாக இருந்ததால் ஆதிசக்தி குழந்தை வேலுவை அங்கிருந்து  மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...