|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 February, 2013

உலக அளவில் 60% புலிகள் நம்மோடு!


 உலக அளவில், 60 சதவீத புலிகளை தன்னகத்தே கொண்டு, இந்தியா   தொடர்ந்து முதல்இடத்தை பிடித்துள்ளது. இந்தியா முழுவதும், 20ம்   நூற்றாண்டில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இருந்தன.   ஆங்கிலேயர் காலத்தில், வனவிலங்கு வேட்டை அதிகமாக இருந்ததால்,   விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இந்திய   சுதந்திரத்துக்கு பின், வனத் துறை ஏற்படுத்தப்பட்டு, வனமும்,   விலங்குகளும் பாதுகாக்கப்பட்டன. கடந்த, 1973ம் ஆண்டு   கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை, 1,800 ஆக   குறைந்ததால், "புராஜக்ட் டைகர்' திட்டத்தை மத்திய அரசு   அமல்படுத்தியது. புலி இனங்கள் தொடர்ந்து அழிந்து வந்ததால், 1972 நவ.,   18ல், புலியை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவித்தது.   முதல் இடம் கடந்த, 2006ல் நடந்த கணக்கெடுப்பின்படி, இந்தியா   முழுவதும் புலிகளின் எண்ணிக்கை, 1,411 ஆக குறைந்ததால், புராஜக்ட்   டைகர் திட்டத்தை மத்திய அரசு முடுக்கியது. தற்போது, இந்தியாவில்   உள்ள, 1,706 புலிகளில், தமிழகத்தில் மட்டும், 292 புலிகள் உள்ளன.

 உலக   அளவில், 60 சதவீத புலிகளை தன்னகத்தே கொண்டு, இந்தியா தொடர்ந்து   முதல்இடத்திலுள்ளது.இதுகுறித்து, வனத் துறை அதிகாரிகள்   கூறியதாவது:உலகம் முழுவதும் இந்திய இனம், சுபத்திரன், சைபீரியஸ்,   பாலி, ஹாஸ்பின், ஜவான் இனம் என, எட்டு வகையான புலி இனங்கள்   இருந்தன. ஆனால், 1940ல் பாலி இனமும், ஹாஸ்பின் இனமும், 1970ல்   ஜவான் இனமும் முற்றிலும் அழிந்தது.உலகில் உள்ள நான்கு வகையான   புலி இனங்களில், ராயல் பெங்கால் வகை புலிகள் மட்டும் இந்தியாவில்   உள்ளது. உலகளவில், 3,200 புலிகள் உள்ளன. இதில், இந்தியாவில், 60   சதவீத புலிகள் உள்ளன. கர்நாடகாவில், 305, தமிழகத்தில், 292, மத்திய   பிரதேசத்தில், 260, உத்தர பிரதேசத்தில், 227, மகாராஷ்டிராவில், 164,   அசாமில், 145 புலிகளும் உள்ளன. தமிழகத்தில் முண்டந்துறை,   முதுமலை, ஆனைமலை சரணாலயங்களில், புலிகளின் எண்ணிக்கை   வேகமாக உயர்ந்து வருகிறது. புலிகளை காக்க மத்திய, மாநில அரசுகள்   பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதால், இந்தியாவில் புலிகளின்   எண்ணிக்கை உயர வாய்ப்புஉள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...