|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 March, 2013

ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் போட்டி..வென்றால் ரூ.1 லட்சம்!


இந்திய அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் உதவும் விதமாக ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கவுள்ளது. இதற்காக ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் டெவலப்மன்ட் என்ற போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான கடைசிநாளாக மார்ச் 31, 2013ஐ நிர்ணயித்துள்ளது அரசு! எம்-கவர்னன்ஸ் என்ற அமைப்பின் வாயிலாக நடத்தப்படும் போட்டிக்கு பின்வரும் பிரிவுகளில் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை உருவாக்கவேண்டும்.
அரசு சேவைகள்,
கல்வி தொடர்பானவை,
சமூக வலைத்தளம்,
இ - ஹெல்த்
போட்டியின் முடிவுகள் ஏப்ரல் 10ஆம் தேதியன்று வெளியிடப்படும். வெற்றி பெறுபவருக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும். 2ஆம் பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்ள, அரசாங்க இணையதளம். http://appscontest.mgov.gov.in/mainpage.jsp செல்க. வெற்றிபெற வாழ்த்துக்கள். நண்பர்களுடன் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுங்கள், மற்றவர்க்கும் பயன்படட்டும்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...