|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 February, 2014

முடிந்தது மாருதி 800 சகாப்தம்!


இந்தியர்களின் கார்விருப்பத்தை நிறைவு செய்த மாருதி 800 வகை கார் உற்பத்தியைநிறுத்திக்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. சிறிய வகை கார்களை உற்பத்தி செய்யும் விதமாக ஜப்பான் நாட்டை சோ்ந்த சுசூகி நிறுவனத்துடன் இணைந்து மாருதி 800 கார்கள் தயாரிக்கப்பட்டன. கடந்த 1980-ம் ஆண்டுகளில் அதன் விலை 50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இதன்விலை ரூ.2.35 லட்சமாகும் எத்தனை சிறியவகை கார்கள் தற்போது உற்பத்தி செய்யப்பட்ட போதிலும் இந்த மாருதி 800 வகை கார்களை விரும்பியவர்கள் அதிகம் பேர் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இதன் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தப் போவதாகவும், இந்த வகை கார்களுக்கான உதிரி பாகங்கள் அடுத்த 8 முதல் 10 ஆண்டுகள்வரை மட்டுமே சந்தையில் விற்பனை செய்யப்படும் என மாருதி சுசூகி நிர்வாக இயக்குனர் சி.வி.ராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: நாட்டின் ஐதராபாத் பெங்களூரு, கான்பூர், புனே உள்ளிட்ட 13 நகரங்களில் மாருதி 800 கார் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அவை தற்போது முற்றிலும் நிறுத்தப்படும். தற்போதைய சூழ்நிலையில் ஆல்டோ, வேகன், ஸ்விப்ட் போன்ற பிராண்டுகளின் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் உற்பத்தியை அதிகரி்க்கச்செய்யவும் விற்பனையை அதி்கரிக்கச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள மாருதிசுசூகி டீலர்களிடம் எத்தனை 800 வகை கார்கள் உள்ளன என்றும் தெளிவாக கூறமுடியாது. இந்நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு 3 முதல்4சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிறியவகை கார்களுக்கு முன்னோடி: தற்போது கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டாடா நானோ, போர்டு பிகோ, வோல்க்ஸ் வேகானின் போலோ, ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ, ஐ10, ஐ20, உட்பட பல்வேறு நிறுவனங்களின் சிறிய வகை கார்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது மாருதி 800 மட்டுமே. மேலும் நடுத்தர மக்களிடம் கார்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியதும் இவையே. குறைந்த அளவே காசு இருந்தால் போதும். கார் வாங்க வேண்டிய எண்ணத்தை நிறைவேற்ற முடியும் என்ற நிலையை ஈடுகட்டியது மாருதி 800 என்றால் மிகையில்லை.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...